குக்கர் சின்னம் எல்லாம் தர முடியாது: தினகரனுக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்

 

குக்கர் சின்னம் எல்லாம் தர முடியாது: தினகரனுக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்

டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

சென்னை: டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக என்ற தனி கட்சியை துவங்கியுள்ள தினகரனுக்கு, அவர் போட்டியிட்ட முதல் தேர்தலிலையே அபார வெற்றியை தேடித் தந்த சின்னம், குக்கர். இந்த சின்னத்தை தக்கவைக்க அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட சமயத்தில், அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

sc

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, குக்கர் சின்னம் பொதுவான சின்னம் என்பதால், அச்சின்னத்தை அமமுகவுக்கு நிரந்தரமாக ஒதுக்க முடியாது என்றும் தேர்தல் நேரத்தில் தான் அமமுகவுக்கு எந்த சின்னம் என்று முடிவு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ec

ஏற்கனவே, கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தாவும் மனநிலையில் இருந்து வரும் சூழலில், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு தினகரனுக்கு நெருக்கடியை அதிகரிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.