கீழ்ப்பாக்கத்தில் கொரோனா வார்டில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர் திடீர் மரணம்

 

கீழ்ப்பாக்கத்தில் கொரோனா வார்டில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர் திடீர் மரணம்

கீழ்ப்பாக்கத்தில் கொரோனா வார்டில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர் திடீர் என மரணமடைந்துள்ளார்.

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் கொரோனா வார்டில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர் திடீர் என மரணமடைந்துள்ளார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வேலூரைச் சேர்ந்த பிரதீபா என்ற இறுதியாண்டு மாணவி கொரோனா பிரிவில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இன்று அவர் தங்கியிருந்த விடுதியில் பிரதீபா இறந்து கிடந்தார். அவரது சாவுக்கான காரணம் மர்மமாக உள்ளது. பிரதீபாவுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியாகியுள்ளதாக கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதன் காரணமாக மருத்துவக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக தீவிரமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் வீட்டுக்குச் செல்லாமல் விடுதியில் தங்கி பணிபுரிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் பணிபுரிந்து வந்த மாணவி பிரதீபா, கடந்த 16-ம் தேதி முதல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள மாணவியர் விடுதியில் தனியாக அறை ஒதுக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளார்.

kmc

இன்று காலை வழக்கம்போல் பணிக்கு செல்வதற்காக பிரதீபாவின் தோழி அவரது அறையை திறக்க முயற்சித்தார். ஆனால் நீண்ட நேரமாக பிரதீபா கதவை திறக்கவில்லை. இதையடுத்து காவலாளிகள் மூலம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிரதீபா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரதீபாவை அங்கிருந்தவர்கள் அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரதீபா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், கீழ்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி பிரதீபாவின் உடலின் பிரேத பரிசோதனை அறிக்கை மூலமாகவே தெரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.