கீழே விழுந்த ரோஜாவை எடுத்து இதயங்களை வென்ற பிரதமர் மோடி

 

கீழே விழுந்த ரோஜாவை எடுத்து இதயங்களை வென்ற பிரதமர் மோடி

அமெரிக்காவில் ஹூஸ்டன் விமான நிலையத்தில் தனக்கு கொடுத்த பூங்கொத்திலிருந்து விழுந்த ரோஜாவை குனிந்து எடுத்து தனது பாதுகாவலரிடம் மோடி கொடுக்கும் காட்சி இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி 7 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். பிரதமர் மோடி முதல் நிகழ்ச்சியாக இன்று ஹூஸ்டனில் நடைபெறும் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று ஹூஸ்டனுக்கு விமானத்தில் வந்தார். விமான நிலையத்தில் மோடியை வரவேற்பதற்காக அமெரிக்காவின் வர்த்தக மற்றும் சர்வதேச விவகாரங்கள் இயக்குனர் கிறிஸ்டோபர், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜெஸ்டர் மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வர்தன் ஷ்ரிங்லா மற்றும் பலர் காத்திருந்தனர்.

மோடி ரோஜாவை எடுக்கும் காட்சி

பிரதமர் மோடி விமானத்தை விட்டு இறங்கியதும் அவர்கள் அவரை வரவேற்றனர். அப்போது பெண் அதிகாரி ஒரு மோடியிடம் பூங்கொத்தை வழங்கினார். அதனை மோடி வாங்கி தனது பாதுகாவலரிடம் கொடுத்தார். அந்த பெண் அதிகாரி பூங்கொத்தை கொடுக்கும் போது அதிலிருந்து ஒரு ரோஜா கீழே விழுந்தது. அதையும் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் எளிமையாக தானே குனிந்து எடுத்து பாதுகாவலரிடம் கொடுத்தார்.

ரோஜாவை எடுக்கும் மோடி

தற்போது பிரதமர் மோடியின் இந்த செயல்தான் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் பலர் இந்த வீடியோ பகிர்ந்து வருகின்றனர். பிரதமர் மோடியின் எளிமையை பாராட்டியும் வருகின்றனர். சிலர் ஒரு சின்ன விஷயத்திலும் பிரதமர் மோடி கவனம் செலுத்துவதை குறிப்பிடுவதாகவும் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.