கீழே குனிவதில் அதிமுக அமைச்சர்களை மிஞ்ச ஆளில்லை….வைரலாகும் வீடியோ

 

கீழே குனிவதில் அதிமுக அமைச்சர்களை மிஞ்ச ஆளில்லை….வைரலாகும் வீடியோ

சென்னை: ஜெயலலிதா சமாதியில் தமிழக அமைச்சர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு விழுந்து கும்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாமாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி தமிழகமெங்கும் இருக்கும் அதிமுகவினர் தங்களது அஞ்சலியை செலுத்தினர். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் உட்பட அதிமுகவினர் அண்ணா சாலையில் இருந்து பேரணியாக சென்று மெரினாவில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது தங்கமணி, செல்லூர் ராஜூ, எஸ்பி வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் முண்டியடித்து கொண்டு கீழே விழுந்து கும்பிட்டு மரியாதை செலுத்தியபோது ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதுதான் அமைச்சர்கள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு கீழே குனிந்து கும்பிட்டனர். தற்போது அவரது மறைவுக்கு பிறகும் நினைவிடத்தில் போட்டி போட்டுக்கொண்டு கீழே குனிந்து கும்பிடுகின்றனர். எனவே கீழே குனிவதில் அதிமுக அமைச்சர்களை மிஞ்ச ஆளில்லை என கூறி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.