கீழே இருந்து கும்பிடு போட வைத்த ஜெயலலிதா ஹெலிகாப்டர் விற்பனைக்கு வருகிறது

 

கீழே இருந்து கும்பிடு போட வைத்த ஜெயலலிதா ஹெலிகாப்டர் விற்பனைக்கு வருகிறது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டரை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டரை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா தனது பயன்பாட்டிற்காக கடந்த 2006-ம் ஆண்டு நவீன வசதிகளுடன் கூடிய ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கினார். சென்னையில் இருந்து வெளியூர் செல்லும்போது அவர் இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்தி வந்தார். பெல் 412 இ.பி.” என்ற வகையைச் சேர்ந்த இந்த ஹெலிகாப்டர் 2 என்ஜின்கள் கொண்டது. 11 பேர் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்ய முடியும்.

ஜெயலலிதா உயிரிழந்த பிறகும் இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஹெலிகாப்டர்  பழுதடைந்துள்ளதால் அது சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை பழுதுபார்த்து மீண்டும் பயன்படுத்துவதற்கு அதிக செலவாகும் என்பதால் தற்போது ஹெலிகாப்டரை விற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி மாநில வணிக நிறுவனத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டரை விற்பதற்கு சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் ஹெலிகாப்டர் விற்பனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதா அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது கீழே இருக்கும் அதிமுகவினர் அனைவரும் அதனை பார்த்து கும்பிடு போட்டும், கீழே விழுந்தும் கும்பிட்டனர். இந்த விவகாரத்தால்  தற்போது வரை அதிமுகவினர் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வருகின்றனர். மேலும், நோட்டா திரைப்படத்தின் நாயகனான விஜய் தேவரகொண்டாவும் இதனை கலாய்த்து சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.