கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி!

கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி!

கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. 

கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. 

மதுரை அருகே உள்ள கீழடியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அவர்கள் 2 மற்றும் 3 ஆம் கட்ட அகழாய்வு பணிகளை மட்டுமே மேற்கொண்டனர். இதையடுத்து தமிழக தொல்லியல் துறை 4 ஆம் கட்ட அகழாய்வை மேர்கொண்டது. இதைத்தொடர்ந்து 5 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஜூன் 13 ஆம் தேதி தொடங்கி இந்த மாத இறுதியில் நிறைவு பெறவுள்ளது. இதுவரை தோண்டப்பட்ட 30 க்கும் மேற்பட்ட குழகளில் பண்டைகால அணிகலன்கள், மணிகள், பானை, ஓடுகள், குறியீடுகள், உறை கிணறுகள்,செப்புக்காசுக்கள், உணவு மற்றும் தண்ணீர் குவளைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அகழாய்வு தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த பணி இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. 

keezhadi

இதனால் தமிழகத்தில் தொடர்ந்து அகழாய்வு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. இதற்கு மத்திய இந்நிலையில் கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை உள்ளிட்ட பகுதிகள் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.