கீழடியைச் சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்படும் : அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வேண்டுகோள்…

 

கீழடியைச் சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்படும் : அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வேண்டுகோள்…

கீழடி அகழாய்வில் தமிழ் நாகரிகத்தைச் சேர்ந்த பல தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

கீழடி அகழாய்வில் தமிழ் நாகரிகத்தைச் சேர்ந்த பல தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில், வடிகால் அமைப்புகள், சுடுமண் குழாய்கள், தமிழ் எழுத்துகள் பொறித்த பானைகள், எழுத்தாணிகள், சுடுமண் வார்ப்பு, பானை ஓடுகள், விளையாட்டுப் பொருட்கள், காதணிகள், தங்கம், உலோகப் பொருட்கள் என 2,600 ஆண்டுகள் புதைந்து கிடந்த ஆயிரக் கணக்கான பொருட்கள் கண்டறியப்பட்டன. 

Keezhadi

தொன்மையான இந்த பொருட்கள் மக்களை வியப்பில் ஆழ்த்தியது. அதனால், கீழடியில் காட்சியகம் அமைப்பதற்கு முன்னரே தற்காலிக கண்காட்சி நடத்த வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதனால், மதுரை உலக தமிழ்ச் சங்க வளாகத்தில் தற்காலிக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் திறந்து  வைத்தார். 

Minister

கீழடி அகழாய்வு குறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கீழடியில் நடைபெறும் இந்த தற்காலிக கண்காட்சியில் அதிக மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த கூட்டம் இன்னும் மிகுந்தால், தமிழர் நாகரீகத்தின் அடையாளமாக விளங்கும் கீழடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவோடு விரைவில் சுற்றுலாத் தலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.