கீழக்கரை ட்ரெடிஷனல் கருவாடுக் குழம்பு.

 

கீழக்கரை ட்ரெடிஷனல் கருவாடுக் குழம்பு.

இந்த பகுதியில் கருவாட்டுக் குழம்பு செய்யும் போது அதில் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள்.அத்துடன் தேங்காய் பாலும் உண்டு.பெரும்பாலும் கும்பளங்கருவாடு அல்லது சீலா கருவாட்டையே பயன்படுத்துகிறார்கள். தாளிப்பும் வித்தியாசமாக இருக்கிறது.

இந்த பகுதியில் கருவாட்டுக் குழம்பு செய்யும் போது அதில் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள்.அத்துடன் தேங்காய் பாலும் உண்டு.பெரும்பாலும் கும்பளங்கருவாடு அல்லது சீலா கருவாட்டையே பயன்படுத்துகிறார்கள். தாளிப்பும் வித்தியாசமாக இருக்கிறது.

என்ன தேவை.

karuvatu kulambhu

சீலா மீன் கருவாடு 200 கிராம்
கத்தரிக்காய் ¼ கிலோ
உருளைக் கிழங்க ஒன்று
முருங்கை காய் இரண்டு
சின்ன வெங்காய 100 கிராம்
பச்சை மிளகாய் 5
தக்காளி 2
புளிக்கரைசல் ஒரு கப்
தேங்காய் பால் ஒரு கப்
உப்பு
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
நல்லெண்ணை 3 ஸ்பூன்

எப்படிச் செய்வது.

சட்டியை அடுப்பில் வைத்து,சூடானதும்,இரண்டு ஸ்பூன் எண்ணெய்  ஊற்றி,அதில்  சிறிதாக வெட்டப்பட்ட சின்ன வெங்காயம் ( கொஞ்சம் சி.வெங்காயத் துண்டுகளை மிச்சம் வையுங்கள் ) கறிவேப்பிலை,பச்சை மிளகாயைப் போட்டு இரண்டு புரட்டுப் புரட்டி விட்டு அத்துடன் வெட்டி வைத்த தக்காளியை சேர்த்து இரண்டு நிமிடம் வேக விடுங்கள். இப்போது,கத்தரிக்காய், உருளைக் கிழங்கு,முருங்கைக் காய் துண்டுகளைப் போட்டு , அத்துடன் கொஞ்சமாக உப்புச் சேர்த்து கிளறி,ஒரு டம்ளர் தன்னீர் விட்டு வேகவிடுங்கள்.

karuvatu kulambhu

முருங்கைக்காய் பாதி வெந்த உடன்,மிளகாய்தூள், கொத்தமல்லித்தூள், இவற்றுடன் கருவாட்டையும் சேர்த்து மூடி போட்டு 10 நிமிடம் கொதிக்க விடுங்கள்.அதன்பிறகு மூடியைத் திறந்து தேங்காய் பாலையும் ,புளிக் கரைசலையும்.ஊற்றி மூன்று நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அனையுங்கள்.
இப்போது தாளிக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணை விட்டு,அதில் மிச்சமிருக்கும் சின்ன வெங்காயத்துடன் கொஞ்சம் கறிவேப்பிலையும் சேர்த்து,வெங்காயம் பொன்னிறம் ஆகும் வரை வதக்கி குழம்பில் சேருங்கள்.
சுவையான கருவாட்டுக்குழம்பு ரெடி,இது சோறு,இட்லி,தோசை,கேழ்வரகு களி இவற்றுக்கு மிக சிறந்த இணையாக இருக்கும்.நாட்டுல வெங்காயம் விக்கிற விலைக்கு இது கொஞ்சம் காஸ்டலியான டிஷ்தான் ட்ரை பண்ணிப் பாருங்க.