கீர்த்தி சுரேஷ் தங்கச்சியா இவங்க? சொல்லவே இல்ல: அதிர்ச்சியான ரசிகர்கள்!

 

கீர்த்தி சுரேஷ் தங்கச்சியா இவங்க? சொல்லவே இல்ல: அதிர்ச்சியான ரசிகர்கள்!

நடிகை கீர்த்தி சுரேஷ் ஸ்லிம்மாக மாறியுள்ள புகைப்படம் ஒன்று தற்போது  சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 

சென்னை:  நடிகை கீர்த்தி சுரேஷ் ஸ்லிம்மாக மாறியுள்ள புகைப்படம் ஒன்று தற்போது  சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 

kerthi

இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் அடுத்தடுத்து  நடித்த ரஜினி முருகன், ரெமோ, பைரவா உள்ளிட்ட படங்கள்   முன்னணி  நடிகைகளின் வரிசையில் இவரை கொண்டு போய்  சேர்த்தது. குறிப்பாக நடிகை சாவித்திரியின் வழக்கை வரலாற்றுப் படமான  நடிகையர் திலகம் இவரது பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது. 

keerthi

இருப்பினும் கீர்த்தி சுரேஷை கொண்டாடும் ரசிகர்கள் அவரை வைத்து மீம்ஸ் போடவும் தயங்குவதில்லை. இது போன்ற மீம்ஸ்களால்  தான் வேதனை அடைந்தேன் என்று அவர் ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்த சம்பவம் எல்லாம் நடந்துள்ளது. 

 

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் படம் ஒன்றில்  நடித்து வருகின்றார். இதற்காக உடல் எடையைக் குறைக்கும்  முயற்சியில் இறங்கியுள்ள அவர், தான் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.  இந்த புகைப்படத்தைக் கண்ட ரசிகர்கள், கீர்த்தி சுரேஷா? இல்ல அவங்க தங்கச்சியா? என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.