கீர்த்தி சுரேஷுக்கு ‘தலைவர் 168’ படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்: வைரல் போட்டோஸ்!

 

கீர்த்தி சுரேஷுக்கு ‘தலைவர் 168’ படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்: வைரல் போட்டோஸ்!

ஐதராபாத்தில் சமீபத்தில் துவங்கியது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.

தர்பார் படத்தையடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இதன்மூலம் சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168 வது  திரைப்படமான இப்படத்தை  சன் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு  ஐதராபாத்தில் சமீபத்தில் துவங்கியது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.

ttn

இதனிடையே நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பாக டெல்லியில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவிடமிருந்து ‘மகாநடி’ சிறந்த நடிகைக்கான தேசிய விருதை  பெற்றார். 

இந்நிலையில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷை வாழ்த்தும் விதமாக  தலைவர் 168 படப்பிடிப்பில் பங்கேற்ற கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அப்போது கீர்த்தி சுரேஷுக்கு ரஜினி பூங்கொத்து  கொடுத்து வாழ்த்தினார். அப்போது இயக்குநர்  சிவா, நடிகர் சூரி ஆகியோர் உடனிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.