கீர்த்தி சுரேஷின் வருங்கால கணவர் இந்த நடிகர் மாதிரி இருக்கணுமாம்..!

 

கீர்த்தி சுரேஷின் வருங்கால கணவர் இந்த நடிகர் மாதிரி இருக்கணுமாம்..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ், குறிப்பிட்ட 2 நடிகர்களை போல் தனது வருங்கால கணவர் அமைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ், குறிப்பிட்ட 2 நடிகர்களை போல் தனது வருங்கால கணவர் அமைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘நடிகையர் திலகம்’, ‘சாமி 2’, ’சண்டக்கோழி 2’, ‘சர்கார்’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின. அவரது நடிப்பில் வெளியான இந்த 4 திரைப்படங்களுமே விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி தனியார் தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் பங்கேற்றார். அப்போது சில முன்னணி தமிழ் நடிகர்களின் புகைப்படங்கள் திரையில் போட்டுக் காட்டப்பட்டன.

vikramvijay

அவர்களில் யாரைப்போல் உங்களது வருங்கால கணவர் அமைய வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று கீர்த்தியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காத நடிகை கீர்த்தி சுரேஷ் பளிச்சென்று இரண்டு உச்ச நடிகர்களின் பெயரை கூறினார்.

கீர்த்தி சுரேஷின் வருங்கால கணவர் தளபதி விஜய் அல்லது சீயான் விக்ரமை போல் இருக்க வேண்டும் என கீர்த்தி தனது ஆசை குறித்து பகிர்ந்துக் கொண்டுள்ளார். இளம் நடிகையான கீர்த்தி சுரேஷ் வயது வித்தியாசமின்றி மூத்த நடிகர்களுடனும் டூயட் பாடி நடிகர்களின் நாயகியாக வலம் வருகிறார்.