கிளியை திருடியதால் கடைக்குள் வைத்து பூட்டப்பட்ட சிறுவன்!

கிளியை திருடியதால் கடைக்குள் வைத்து பூட்டப்பட்ட சிறுவன்!

நாகையில் பஞ்சவர்ண கிளிகளை திருடியதால் ஜவுளி கடையினுள் சிறுவன் பூட்டி வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தற்கொலைக்கு முயன்ற சிறுவனை மீட்ட வெளிப்பாளையம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகை புதுத்தெரு பகுதியை சேர்ந்த தாரிக் என்பவர் தனது வீட்டில் பஞ்சவர்ண கிளிகளை வளர்த்து வருகிறார். சில மாதங்களாக அவரது வீட்டில் இருந்த  15ஆயிரம் மதிப்புள்ள  பஞ்சவர்ண கிளிகள் திருடுப் போய் உள்ளது. இதனால்  சுதாரித்துக் கொண்ட தாரிக் நேற்றைய முன்தினம் தனது வீட்டில் இருந்த கிளிகளை சிறுவர்கள் திருடி தப்பி செல்வதை பார்த்துள்ளார். அதனை தொடர்ந்து விசாரணையில் கிளிகளை திருடி சென்ற சிறுவன் திருவாரூர் மாவட்டத்தைச்சேர்ந்த 15 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அந்த சிறுவனை நாகை தம்பிதுரை பூங்கா அருகில் கடை ஒன்றில் வைத்து விசாரித்ததாக தெரிகிறது. பின்னர் சிறுவனை கடைக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றனர். 

இதனால் பயந்து போன சிறுவன், கடையினுள் இருந்த பசையை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. பூட்டிய கடைக்குள் இருந்து சிறுவனின் அலறல் சப்தம் கேட்டதையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.  அங்கு வந்த காவல்துறையினர் சிறுவனை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்