கிளிமஞ்சாரோ: பாராகிளைடிங் செய்த கனடா சுற்றுலா பயணி உயிரிழப்பு

கிளிமஞ்சாரோ: பாராகிளைடிங் செய்த கனடா சுற்றுலா பயணி உயிரிழப்பு

பிரபல சுற்றுலா தலமான கிளிமஞ்சாரோவில் பாராகிளைடிங் செய்த கனடா சுற்றுலா பயணி மலை உச்சியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்கா பகுதியில் இருக்கும் தன்சானியா நாட்டின் அழகிய கிளிமஞ்சாரோ மலைப்பகுதி உலகின் பிரபல சுற்றுலா தளமாக இயங்கி வருகிறது. இங்கு ட்ரெக்கிங் மற்றும் பாராகிளைடிங் ஆகியவை செய்வதற்காக உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இப்பகுதிக்கு வருவர். 

justin

வருடாவருடம் குறிப்பிட்ட தொண்டு அமைப்புகள் இங்கே ட்ரெக்கிங் மற்றும் பாராகிளைடிங் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதும் உண்டு. வெளிநாடு மலைப்பகுதிக்கு சுற்றுலா செல்லும் மக்களும் இங்கே வந்து செல்வதால் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

அப்படி, ஜஸ்டின் கைலோ எனும் கனடாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி உலகின் பல மலை பகுதிகளுக்கு சுற்றுலா சென்று ட்ரெக்கிங் மற்றும் பாராகிளைடிங் போன்ற செயல்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். கிளிமாஞ்சாரோ மலைப்பகுதியில் தனது அனுபவத்தை பெற வந்துள்ளார். 

justin

ஜஸ்டின் நேற்று பாராகிளைடிங் செய்வதற்காக மலை உச்சியில் இருந்து கீழே குதித்துள்ளார். சிறிது தூரம் சென்ற பிறகு தனது பாராசூட்டை திறக்க முயற்சிக்கையில், அதில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக திறக்க முடியாமல் போனது. இதனால் செய்வதறியாது 20,000 அடி மலை உச்சியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். 

இவரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சில தினங்களுக்கு பாராகிளைடிங் செயல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.