கிளப், ஓட்டல்கள், பார்கள் மற்றும் உணவகங்களில் மதுபானங்கள் விற்க கர்நாடக அரசு உத்தரவு

 

கிளப், ஓட்டல்கள், பார்கள் மற்றும் உணவகங்களில் மதுபானங்கள் விற்க கர்நாடக அரசு உத்தரவு

கர்நாடகாவில் 750க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து கடந்த 4 ஆம் தேதி முதல் கர்நாடகாவில் மதுபான கடைகள் திறக்கப்பட்டது

கர்நாடகாவில் 750க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து கடந்த 4 ஆம் தேதி முதல் கர்நாடகாவில் மதுபான கடைகள் திறக்கப்பட்டது. குடிமக்கள் அடித்துப்பிடித்து மதுவை வாங்கியதால் சமூக இடைவெளி கேள்விக்குறியானது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் சுமார் ஒரு கி.மீ, தூரத்திற்கும் மேல் வரிசையில் நின்று மதுவை வாங்கி சென்றனர். மேலும் சிலர் போதையின் உச்சத்துக்கே சென்று மதுக்கடை திறந்த உற்சாகத்தில் வெடி வெடித்து கொண்டாடினர். 

Liquor

இந்நிலையில், கிளப், ஓட்டல்கள், பார்கள் மற்றும் உணவகங்களில் மே 17 ந்தேதி வரை மதுபானங்களை விற்பனை செய்ய கர்நாடக அரசு அனுமதி அளித்து உள்ளது. எம்ஆர்பி விலையில் தங்களின் தற்போதைய மதுபான இருப்பை விற்று தீர்க்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் மது விற்க அனுமதியில்லை. மே 8 முதல் மே 17 ஆம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை கிளப், ஓட்டல்கள், பார்கள் மதுபானம் விற்பனை செய்யப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.