கிறிஸ்துமஸ் பண்டிகை : தமிழகத்தில் புகழ் பெற்ற தேவாலயங்களில் இன்று நள்ளிரவு சிறப்பு ஆராதனை! 

 

கிறிஸ்துமஸ் பண்டிகை : தமிழகத்தில் புகழ் பெற்ற தேவாலயங்களில் இன்று நள்ளிரவு சிறப்பு ஆராதனை! 

கிறிஸ்துமஸ் பண்டிகையினை தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று இரவு அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பாக கொண்டாடுகின்றனர். 

இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த திருநாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

santhome church

அதே போல் தமிழகத்திலும் பிரசித்தி பெற்ற  தேவாலயங்களாக கருதப்படும் வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம்,தூத்துக்குடி பனிமய மாதா தேவாலயம், பூண்டி மாதா தேவாலயம் ,அச்சிறுபாக்கம் மழைமலை மாதா தேவாலயம்,

சென்னை சாந்தோம் தேவாலயம் மற்றும் பரங்கிமலை புனித தோமையார் தேவாலயம், போன்ற புகழ் பெற்ற தேவாலயங்களில் இன்று நள்ளிரவு கிறிஸ்தவர்கள் அனைவரும் தேவாலயங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர். 

santhome church

அதனை தொடர்ந்து நள்ளிரவு திருப்பலியில் நற்கருணை விருந்தும் நடைபெறுகிறது. சென்னை சாந்தோம் பேராலயத்தில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட ஆயர் இரவு 11.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலியினை  நிறைவேற்றுகிறார் . இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்துமஸ் தினத்தன்று கிறிஸ்தவர்களின் வீடுகளில் விருந்து நடைபெறும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தும் கேக் கொடுத்தும் மகிழ்ச்சியை பரஸ்பரம் பரிமாறிக்கொள்வர்கள்.

நாளைய தினம் கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் அழைத்து உபசரிப்பார்கள். அன்றைய நாளில் இரவில் வாண வேடிக்கைகளும், கலை நிகழ்ச்சிகளும் பல்வேறு திருத்தலங்களில் நடைபெறுகிறது .

christmas

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவில் இருந்தே தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளதால் ஆயிரக்கணக்கில் மக்கள் ஒரே இடத்தில் கூடுவார்கள் என்பதால்

சென்னையில் உள்ள சாந்தோம், எழும்பூர் கதீட்ரல், ராயப்பேட்டை வெஸ்லி உட்பட பல முக்கிய தேவாலயங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை  மிகவும் சிறப்பாக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் .