கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை

 

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை (புதன்கிழமை, டிச.25) இந்திய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இந்திய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இந்த வாரம் மொத்தம் 4 தினங்கள் மட்டுமே வர்த்தகம் நடைபெறும். தொடர்ந்து 4 வர்த்தக தினங்களாக ஏற்றம் கண்டு பங்கு வர்த்தகம் நேற்று சிறிய சரிவை சந்தித்தது. வரும் வியாழக்கிழமையன்று டிசம்பர் மாத முன்பேர வர்த்தக கணக்கு முடிக்கப்படும் என்பதால் இன்றும், நாளைமறுநாளும் பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள நிறுவனங்கள் பட்டியலில் நேற்று முதல் புதிய மாற்றம் நடைமுறைக்கு வந்தது. அதாவது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் குறியீட்டில் இடம் பெற்று இருந்த டாடா மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ் டி.வி.ஆர்., வேதாந்தா மற்றும் யெஸ் வங்கி ஆகிய 4 நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டன. 

நெஸ்லே இந்தியா நிறுவனம்

அதேசமயம் சென்செக்ஸ் குறியீட்டு நிறுவனங்கள் பட்டியலில், நெஸ்லே இந்தியா, டைட்டன் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய 3 நிறுவனங்கள் நேற்று இடம் பிடித்தன. இதனையடுத்து இதுவரை குறியீட்டு பட்டியலில் இருந்த மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கை 31-லிருந்து 30ஆக குறைந்தது.