கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 70 கோடி ரூபாயை போனஸாக வழங்கிய நிறுவனம்!

 

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 70 கோடி ரூபாயை போனஸாக வழங்கிய நிறுவனம்!

இந்தியாவில் வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது, லட்சக் கணக்கான ஐ.டி பணியாளர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர் என்று செய்தி வெளியாகி வரும் வேளையில், அமெரிக்காவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று இந்திய மதிப்பில் சுமார் 70 கோடி ரூபாய் அளவுக்கு கிறிஸ்துமஸ் போனஸ் அளித்து தனது ஊழியர்களை மகிழ்ச்சியில் பொங்க வைத்துள்ளது. 

பொதுவாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேலை நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும்.  கிறிஸ்துமஸ்க்கு போனஸ் மற்றும் விடுமுறைகளை அந்நாட்டு நிறுவனங்கள் வாரி வழங்கும். அதன்படி மேரிலேண்ட் மாகாணத்தில் இயங்கிவரும் செயிண்ட் ஜான் பிராப்பர்ட்டீஸ் என்ற நிறுவனம், அங்கு பணியாற்றும் 200 ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு வழங்க திட்டமிட்டது. இதற்காக விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்த நிறுவனம், ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

bonus

காரணம் விருந்தில் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு சிவப்புநிற உறை வழங்கப்பட்டது. அதனை பிரித்து பார்த்தபோது 100 டாலரிலிருந்து 2 லட்சத்து 70 ஆயிரம் டாலர் வரை ரொக்கம் இருந்தது. அதாவது அவர்களது பதவிகளை பொருத்து போனஸ் தொகையும் இருந்தன. போனஸ் தொகையை மகிச்சியுடன் ஏற்று கொண்டுள்ள ஊழியர்கள் இந்த தொகை தங்களது கடனைத் தீர்க்கவும், தங்கள் குழந்தைகளின் பல்கலைக்கழக கட்டணத்தை செலுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.