கிறிஸ்துமஸ் நாளில் பிலிபைன்ஸை தாக்கிய ‘பான்போன்’ சூறாவளி!

 

கிறிஸ்துமஸ் நாளில் பிலிபைன்ஸை தாக்கிய ‘பான்போன்’ சூறாவளி!

கிறிஸ்துமஸ் தினத்தன்று 195 கி.மீ வேகத்தில் ‘பான்போன்’ என்ற சூறாவளி பிலிபைன்ஸில் உள்ள  கிராமங்கள், சுற்றுலா தலங்களை,கடுமையாக  தாக்கியுள்ளது.மேலும் அங்கு உயிரிழப்புகள் 16 இருக்கலாம் எனவும் பலருக்கும் மிக மோசமான காயங்களுக்கு ஆளாகியிருக்கலாம் எனவும்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் தாக்கத்தில் வீடுகளின் கூரைகள், மின்சார கம்பங்கள் ஆகியவை சேதமடைந்துள்ள நிலையில், மொபைல் போன் சேவைகளும் துண்டிக்க பட்டுள்ளன. 

typhoon

சுற்றுலா தளங்களான போரக்கே, கோரோன் மற்றும் அங்குள்ள கடற்கரைகளும், விமான சேவைகள் கூட ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகளும் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்துக்கும்  தடை செய்யப்பட்டுள்ளன, சேதங்களை அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இது மிகவும் மோசமாக உள்ளது என இன்ஸ்டாகிராம் மெசேஞ்சர் வழியாக ஜங் பைங் ஜூன் என்பவர் தெரிவித்துள்ளார். 

typhoon

கடந்த புதன்கிழமையன்று 10,000 மேற்பட்டோர் விமானங்களிலும், வாகனங்களின் உதவியுடன் நகரங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். மேலும் இந்த சூறாவளியால் ஒரு காவல் துறை அதிகாரி ரோந்தில் இருந்தபோது மின் கம்பம் சரிந்து விழுந்ததில்  அதிலிருந்து வெளியான  மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் எனவும், தகவல் தெரிவிக்கப்ட்டது. 

cyclone

பிலிபைன்ஸ் சராசரியாக ஆண்டிற்கு 20 சூறாவளிகளை எதிகொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனால் அங்கு மக்கள் தங்கள் வீடுகளையும்,அறுவடை,கட்டுமானங்கள் போன்றவைகளை இழந்து தவிக்கின்றனர்.இந்த கோர பாதிப்பிலிருந்து அவர்கள் மீள  அவர்களுக்கு பல ஆண்டுகள் தேவைப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.