கிறிஸ்துமஸுக்கு தயாரான ‘2.0’ கேக்; ஓயாத ரஜினி மேனியா

 

கிறிஸ்துமஸுக்கு தயாரான ‘2.0’ கேக்; ஓயாத ரஜினி மேனியா

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பேக்கரி ஒன்றில், ரஜினிகாந்தின் சிட்டி ரோபோ வடிவத்தில் உருவான பிரம்மாண்ட கேக் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பேக்கரி ஒன்றில், ரஜினிகாந்தின் சிட்டி ரோபோ வடிவத்தில் உருவான பிரம்மாண்ட கேக் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் உள்ள பேக்கரியில், ‘2.0’ படத்தின் சிட்டி ரோபோ கேரக்டர் வடிவில் உருவாக்கப்பட்ட கேக் சுமார் 5 ½ அடி உயரத்தில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் குவிகின்றனர்.

2point0

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை வரவேற்கும் விதமாக, ஆண்டுதோறும் சேலத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் தலைவர்களின் சிலை வடிவில் கேக் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்து வரும் ‘2.0’ திரைப்படத்தின் ஈர்ப்பினால், இம்முறை சிட்டி ரோபோ வெர்ஷன் 2.0-வின் வடிவில் கேக் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

chitti

சுமார் 40 கிலோ சர்க்கரை மற்றும் 400 முட்டைகளால் தயாரிக்கப்பட்ட இந்த சிட்டி ரோபோ கேக்கை பார்க்க வரும் குழந்தைகள், ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர். இந்த சிட்டி ரோபோ சிலை புத்தாண்டு வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று பேக்கரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.