கிறித்துவ திருமணங்களைப் பதிவு செய்து சான்றிதழ் வழங்கக் கோரிய மனு : பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு  

 

கிறித்துவ திருமணங்களைப் பதிவு செய்து சான்றிதழ் வழங்கக் கோரிய மனு : பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு  

திருச்சபைகளில் நடந்த திருமணங்களின் சான்றிதழ்களைத் தமிழக பதிவுத்துறை பராமரிக்கிறதே தவிர அதனைப் பதிவு செய்வதில்லை என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதிலும்  பாதிரியார்களும் பிஷப்புகளும் இந்தியக் கிறித்துவ சட்டத்தின் படி கிறித்துவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணம் முடிந்த பிறகு சம்மந்தப்பட்ட திருச்சபைகள் தமிழக பதிவுத் துறைக்குச் சான்றிதழை அனுப்பி வைக்கின்றனர்.

marriage c

ஆனால், பதிவுத் துறையினர் திருச்சபைகளில் நடத்தப்பட்ட திருமணங்களைப் பதிவு செய்ய மறுக்கின்றனர் என்றும் பதிவு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் வேலூரைச் சேர்ந்த பிஷப் நோகா யோவனராஜ் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு அளித்திருந்தார். 

court

அந்த மனு இன்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரிக்கப்பட்டது. அதில், திருச்சபைகளில் நடந்த திருமணங்களின் சான்றிதழ்களைத் தமிழக பதிவுத்துறை பராமரிக்கிறதே தவிர அதனைப் பதிவு செய்வதில்லை என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிஷப் நோகா யோவனராஜ் அளித்த மனு தொடர்பாக டிசம்பர் 6-ம் தேதி பதிலளிக்க வேண்டும் என்று தமிழக பதிவுத் துறைக்கு  உத்தரவிட்டு மனு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.