கிறித்துவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கும் வாக்குவாதம் : சாதுரிய பேச்சால் மதக்கலவரத்தைத் தடுத்த டி.எஸ்.பி!

 

கிறித்துவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கும் வாக்குவாதம் : சாதுரிய பேச்சால் மதக்கலவரத்தைத் தடுத்த டி.எஸ்.பி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 54 இடங்களில் இந்துக்களின் சங்கம நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சார்பில் நடத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 54 இடங்களில் இந்துக்களின் சங்கம நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சார்பில் நடத்தப்பட்டது. நேற்று இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது பெரியவிளை ஜங்ஷனில் போதகர் ஜோசப் என்பவர் கிறிஸ்துவ அமைப்பின் நோட்டீஸை விநியோகம் செய்து கொண்டிருந்துள்ளார். அதனை அறிந்த கன்னியாகுமரி மண்டலத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த பகுதிக்குச் சென்று நோட்டீஸ் விநியோகம் செய்வதைத் தடுத்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

ttn

அங்கிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளனர். அப்போது, போலீசார் கிறித்துவ மதத்தினருக்கு மட்டுமே ஆதரவாகப் பேசுவதாகக் கூறி ஸ்டேஷனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை அறிந்து காவல் நிலையத்துக்கு வந்த டி.எஸ்.பி பாஸ்கரன், இரண்டு தரப்பினரையும் சமாதான படுத்தும் படி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கடைசியில் இந்த பேச்சு வார்த்தையில் கிறித்துவர்கள் யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அவர் மன்னிப்பு கேட்டதும் வாக்குவாதத்தை மறந்த இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.  அவரது சாதுரிய பேச்சால் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி மதக்கலவரத்தைத் தடுத்துள்ளார் பாஸ்கரன்.