கிரேஸி மோகனின் உடல் தகனம்: மயானத்தில் கண்ணீர் சிந்திய கமல்!?

 

கிரேஸி  மோகனின் உடல் தகனம்: மயானத்தில் கண்ணீர்  சிந்திய கமல்!?

பிரபல நடிகர் கிரேஸி மோகனின்  உடல்  சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

சென்னை:  பிரபல நடிகர் கிரேஸி மோகனின்  உடல்  சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

பிரபல நகைச்சுவை நடிகர், கதை, திரைக்கதை ஆசிரியர்,  வசனகர்த்தா,  நாடகக்கலைஞர் என பன்முக திறமையை தனக்குள்  கொண்டிருந்தவர் கிரேஸி மோகன். அவர் நடிப்பாக இருந்தாலும், அவர் எழுதிய வசனமாக இருந்தாலும் சரி அது  இன்றளவும் மக்கள் மனதில் அழுத்தமாகப் பதியப்பட்ட ஒன்றாகவே மாறிப்போயுள்ளது. 

mohan

அவ்வை சண்முகி படத்தில் அவர் எழுதிய வசனங்கள் ஒவ்வொன்றும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. உனக்கு வேணும்னா  அவரு முதலியாரா இருக்கலாம். எனக்கு முதலி யாரோ! என்ற வசனத்தை ரசிக்கவைத்தவர்கள் யாரும் இருந்து விட முடியாது. ஆபாசம், இரட்டை அர்த்த வசனம் இல்லாமல் மற்றவர்களை சிரிக்க வைத்துப் பழக்கப்பட்டவர். 

mohana

இந்நிலையில் மாரடைப்பால் சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரேஸி  மோகன் சிகிச்சைப் பலனின்றி நேற்று  காலமானார். இதையடுத்து மந்தவெளியிலுள்ள  வீட்டில் வைக்கப்பட்டிருந்த  அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இணையத்தில் தங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனர். 

mohan

 

இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு  மந்தவெளி இல்லத்திலிருந்து கிரேஸி மோகனின் உடல் இறுதி சடங்கிற்காக பெசன்ட் நகர் மின்மயானம் கொண்டு செல்லப்பட்டு அங்குத் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் நடிகர் கமல் ஹாசன், ஜெயராம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.கமல் அங்கு கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தது கிரேஸி  மோகனுடனான நட்பையே பிரதிபலித்தது.  அவ்வை சண்முகி, பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம், தெனாலி உள்ளிட்ட கமலின் பல படங்களுக்கு கிரேஸி  மோகன் வசனம் எழுதியது குறிப்பிடத்தக்கது.