கிரேடியன்ட் டிசைன் கொண்ட ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

 

கிரேடியன்ட் டிசைன் கொண்ட ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆனதில் இருந்தே இந்தியாவில் அந்த மாடல் எப்போது விற்பனைக்கு வரும் என்று பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்க ஆசைப்படுபவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இன்று மதியம் 1.00 மணியளவில் டெல்லியில் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சி சியோமி நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் லைவாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இரண்டு மாடல்களிலும் வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் கிரேடியன்ட் வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் நெப்டியூன் புளு, நெபுளா ரெட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் ஆகிய நிறங்களிலும், அதேபோல ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் ஆனிக்ஸ் பிளாக், ரூபி ரெட் மற்றும் சஃபையர் புளு ஆகிய நிறங்களிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 6-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ரெட்மி நோட் 7 மாடலும், மார்ச் 13-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ரெட்மி நோட் 7 ப்ரோ மாடலும் ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi இணையதளம் மற்றும் Mi ஹோம் ஷோரூம்களில் விற்பனைக்கு வெளியாகிறது.

விலைப் பட்டியல்:

ரெட்மி நோட் 7 ப்ரோ (4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி) – ரூ.13,999

ரெட்மி நோட் 7 ப்ரோ (6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி) – ரூ.16,999

ரெட்மி நோட் 7 (3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி) – ரூ.9,999

ரெட்மி நோட் 7 (4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி) – ரூ.11,999

ரெட்மி நோட் 7 ப்ரோ சிறப்பம்சங்களை பொறுத்தவரை 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், அட்ரினோ 612 GPU, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10 இயங்குதளம், ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 48 எம்.பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, சோனி IMX586, 6P லென்ஸ், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 13 எம்.பி. செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், ஐ.ஆர் சென்சார், ஏ.ஐ. போர்டிரெயிட், ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக், ஸ்ப்ளாஷ் ப்ரூஃப், 3.5 எம்.எம் ஆடியோ ஜாக், ஸ்மார்ட் பி.ஏ. TAS2563, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி டைப்-சி, 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, க்விக் சார்ஜ் 4 ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அதேபோல ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களை பொறுத்தவரை 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 3 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10, டூயல் சிம் ஸ்லாட், 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, சோனி IMX486, 2 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா, 13 எம்.பி. செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார், ஸ்ப்ளாஷ் ப்ரூஃப், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்மார்ட் பி.ஏ. TAS2563, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 4 ஆகியவை இடம்பெற்றுள்ளன.