கிரெடிட் கார்டு பில் கட்டிய பிறகும் தொடர்ந்து போன் செய்து தொந்தரவு செய்த வங்கிக்கு 60 ஆயிரம் அபராதம்!

கிரெடிட் கார்டு பில் கட்டிய பிறகும் தொடர்ந்து போன் செய்து தொந்தரவு செய்த வங்கிக்கு 60 ஆயிரம் அபராதம்!

கிரெடிட் கார்டு பில் தொகை செலுத்திய பிறகும் அதை பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் தொலைபேசியில் அழைத்து தொல்லை கொடுத்த தனியார் வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

கிரெடிட் கார்டு பில் தொகை செலுத்திய பிறகும் அதை பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் தொலைபேசியில் அழைத்து தொல்லை கொடுத்த தனியார் வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த பகீரதா என்பவர் பொறியாளராக வேலைப்பார்த்துவருகிறார். பகீரதா தனியார் வங்கியின் கிரடிட் கார்டை பயன்படுத்தி 4,500 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கியுள்ளார். அந்தத் தொகையை கடந்த 2017 ஏப்ரல் 21ம் தேதி செலுத்தியுள்ளார். ஆனாலும் கிரெடிட் கார்டுக்கு பில் கட்டவில்லை எனக்கூறி வங்கி ஊழியர்கள் தொலைப்பேசியில் அழைத்து தொல்லை கொடுத்துள்ளனர். தொல்லை தாங்கமுடியாததால் தான் செலுத்திய பில் காப்பியை புகைப்படமாக எடுத்து வங்கிக்கு அனுப்பிவைத்துள்ளார்.

அதனை பொருட்படுத்தாத வங்கி மீண்டும் பணம் செலுத்த சொல்லி தொந்தரவு செய்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பகீரதா, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பில் தொகை கட்டிய பிறகும் வாடிக்கையாளரை தொந்தரவு செய்ததற்காக தனியார் வங்கிக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதித்து வழக்கை முடித்துவைத்தனர்.