கிரெடிட் கார்டு கூடுது….. டெபிட் கார்டு குறையுது!

 

கிரெடிட் கார்டு கூடுது….. டெபிட் கார்டு குறையுது!

கடந்த மார்ச் முதல் மே வரையிலான காலத்தில், மொத்த டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை 10 கோடிக்கு மேல் குறைந்தது. அதேசமயம், கிரெட்டி கார்டுகளின் எண்ணிக்கை 10 லட்சம் அதிகரித்துள்ளது.

வங்கிகளில் கணக்கு தொடங்கும் போதே டெபிட் கார்டு வழங்கப்படுகிறது. இதனால் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 90 கோடிக்கு மேல் இருந்தது. அதேசமயம், கிரெடிட் கார்டு எண்ணிக்கை சில கோடிகள் தான். இதற்கு காரணம் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் அதற்கான தொகையை சரியான நேரத்தில் கட்ட வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிப்பு போன்ற பிரச்சினைகள் உள்ளதால் பெரும்பாலானோர் கிரெடிட் கார்டு வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இதுதான் கிரெடிட் கார்டு குறைவாக உள்ளதற்கு காரணம்.

டெபிட் கார்டு

சமீபகாலமாக டெபிட் கார்டு  எண்ணிக்கை குறைந்து கிரெடிட் கார்டு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் முதல் மே வரையிலான காலத்தில் டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை குறைந்தது. இதனையடுத்து மொத்த டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை 92.4 கோடியிலிருந்து 82.4 கோடியாக குறைந்தது. அதாவது கணக்கீடு காலத்தில் சுமார் டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை 10 கோடி குறைந்தது. 

 

வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து பழைய மேக்னடிக் ஸ்டிரிப் கார்டுக்கு பதிலாக சிப் பொருத்திய டெபிட் கார்டுகளை வழங்கி வருவதே டெபிட் கார்டு எண்ணிக்கை சரிவுக்கு ஒரு காரணம் என தகவல். பஞ்சாப் நேஷனல் வங்கியின் டெபிட் கார்டு எண்ணிக்கை அதிகபட்சமாக 5.2 கோடி குறைந்தது. அடுத்து ஸ்டேட் வங்கியின் டெபிட் கார்டு எண்ணிக்கை 2.2 கோடி குறைந்தது.

கிரெடிட் கார்டு

கடந்த மார்ச் முதல் மே வரையிலான காலத்தில் கிரெடிட் கார்டு எண்ணிக்கை 10 லட்சத்துக்கு மேல் உயர்ந்தது. கிரெடிட் கார்டுகளின் மொத்த எண்ணிக்கை 4.89 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் எச்.டி.எப்.சி. வங்கிதான் அதிகபட்சமாக 1.26 கோடி கிரெடிட் கார்டுகளை வழங்கியுள்ளது. அடுத்ததாக ஸ்டேட் வங்கி 87 லட்சம் கிரெடிட் கார்டுகளை வழங்கி உள்ளது.