கிருஷ்ணருக்கு இரண்டு பிறந்தநாட்கள்? எதைக் கொண்டாட வேண்டும்?

கிருஷ்ணருக்கு இரண்டு பிறந்தநாட்கள்? எதைக் கொண்டாட வேண்டும்?

இந்த வருடம் ஆகஸ்ட் 23ம் தேதி கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. அதற்கு மறுநாள், ஆகஸ்ட் 24ம் தேதி ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஏன் கிருஷ்ணனுக்கு இரண்டு பிறந்தநாட்கள் கொண்டாடப்படுகிறது? நாம் இவற்றில் எதைக் கொண்டாடவேண்டும் ? என்று பக்தர்களுக்கிடையே நிறைய கேள்விகள் எழுகின்றன.

உண்மையில் கிருஷ்ணர் மதுராவில் அவதரித்தது துவாபர யுகத்தில் அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில். அப்போது இரண்டும் ஒரே நாளாக இருந்தது. கண்ணன் பிறந்த திதியான அஷ்டமியை கோகுலத்து மக்கள் அனைவருமே கொண்டாடினார்கள். அதனால் அதன் பெயரிலேயே கிருஷ்ணரின் பிறந்த நாள் கோகுலாஷ்டமி என்று கொண்டாடப்பட்டு வருகிறது. 
கண்ணன் பிறந்த நாளான அஷ்டமி திதியும், ரோஹிணி நக்ஷத்திரமும் பல சமயங்களில் வெவ்வேறு நாட்களில் வரும். சில வருடங்கள் ஒரே நாளிலும் இவை சேர்ந்து வரும். மதுரா, துவாரகா போன்ற இடங்களிலும், மற்றும் பல சம்பிரதாயங்களிலும் இன்றும் கண்ணன் அவதரித்த அஷ்டமி திதியைத் தான் கொண்டாடுகிறார்கள். அதனால் ஆகஸ்ட் 23, 2019 அன்று கோகுலாஷ்டமி.
ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பகவான் அவதரித்த நட்சத்திரமே முக்கியமாக கருதப்படுகிறது. அதனால் ஆவணி மாதத்தின் ரோகிணி நட்சத்திரம் வரும் தினத்தையே வைணவர்கள் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடுகிறார்கள். அப்படி ரோகிணி நட்சத்திரத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால், கிருஷ்ண ஜெயந்தி இந்த வருடம் ஆகஸ்ட் 24, 2019 அன்று தான் கொண்டாடப்படுகிறது.

சரி… நாம் எதைக் கொண்டாடவேண்டும்?
நீங்கள் உங்கள் சம்பிரதாய முறைப்படி இரண்டு தினங்களில் ஏதேனும் ஒரு நாளைக் கொண்டாடலாம். தவறில்லை. மனிதர்களுக்கே ஆங்கில பிறந்த நாள், நட்த்திர பிறந்த நாள் என்று இரண்டு பிறந்த நாட்களைக் கொண்டாடும் போது, நாம் நம் கண்ணனின் இரண்டு பிறந்த நாளையும் கொண்டாடி மகிழ்வதிலும் தவறில்லை தானே!