கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கொரோனா – புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்தவருக்கு நோய்த் தொற்று

 

கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கொரோனா – புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்தவருக்கு நோய்த் தொற்று

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது

தமிழகத்தில் 28 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 2500-க்கும் மேற்பட்டோருக்கு மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 1200 பேருக்கு மேல் கொரோனா தொற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறார்கள்.

krishnagiri

தமிழகத்தில் ஒரு கொரோனா பாதிப்பு கூட இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்து வந்தது. அதனால் அது பச்சை மண்டலமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வேப்பனஹள்ளி அருகே நல்லூரைச் சேர்ந்த 67 வயது முதியவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதியானது.

ஆந்திரா மாநிலத்தில் உள்ள புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் முதியவருடன் அங்கு சென்ற 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அந்த முதியவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வசித்து வந்த தெருக்களுக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். ஏற்கெனவே புட்டபர்த்தி சாய்பாபா கோயிலுக்கு போய்விட்டு வந்த கடலூரை சேர்ந்த 69 வயது முதியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.