கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதந்த 2 டன் மீன்கள்.. அதிர்ச்சியில் ஆழ்ந்த பொதுமக்கள்!

 

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதந்த 2 டன் மீன்கள்.. அதிர்ச்சியில் ஆழ்ந்த பொதுமக்கள்!

வெல்டிங் பணி நடைபெற்று வருகிறது. அதனால் அணையின் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

கிருஷ்ணகிரி அணையால் அதன் சுற்று வட்டார பகுதியில் 9012 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அணையின் மதகு உடைந்ததால், ரூ.3 கோடி செலவில் தற்காலிக மதகு அமைக்கப்பட்டது. மதகுகள் சேதம் அடைந்ததால், அந்த அணையின் 7 மதகுகளும் மாற்றம் செய்யும் பணி நடைபெற்றது. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து, வெல்டிங் பணி நடைபெற்று வருகிறது. அதனால் அணையின் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

ttn

இந்நிலையில் நேற்று காலை அணையில் இருந்த லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் துர்நாற்றம் வீசியிருக்கிறது. அவை மொத்தமாக 2 டன்கள் இருக்கும் என கூறப்படுகிறது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அவை அனைத்தையும் வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். போதிய ஆக்சிஜன் கிடைக்காததாலும், கடுமையாக வெயில் அடித்ததாலும் மீன்கள் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால், அப்பகுதியில் இருக்கும் மக்கள் அனைவரும் அந்த தண்ணீரை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.