கிரிக்கெட் விளையாட்டில் நாகரீகம் வேண்டும் – அஸ்வினுக்கு பிசிசிஐ குட்டு

 

கிரிக்கெட் விளையாட்டில் நாகரீகம் வேண்டும் – அஸ்வினுக்கு பிசிசிஐ குட்டு

கிரிக்கெட் விளையாட்டில் நாகரீகத்தை கடைபிடிக்குமாறு வேகப்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டில் நாகரீகத்தை கடைபிடிக்குமாறு வேகப்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

மன்கட் அவுட்

ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே ஞாயிறு அன்று ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில்  14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.இந்தப் போட்டியில் 13-வது ஓவரின் போது  சிறப்பாக விளையாடி வந்த ராஜஸ்தான் வீரர்  பட்லரை அஸ்வின் ‘மன்கட்’ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். 

அஸ்வின்

பந்துவீச்சாளர், மட்டையாளர் எல்லைக்கோட்டிற்குள் இல்லாத போது, பந்தை தன் பக்கத்திலேயே இருக்கும் விக்கெட்டில் அடித்து அவுட் செய்வதே மன்கட் அவுட் எனப்படுகிறது. இம்முறையில் கிரீஸை விட்டு பட்லர் வெளியே வந்தவுடன், தனது பந்துவீச்சு ஆக்‌ஷனை நிறைவு செய்யாமல் அஸ்வின் மன்கட் அவுட் செய்தார். ஐசிசி விதிப்படி இது சரியானது என்கிற போதிலும் கிரிக்கெட் ஸ்பிரிட்படி, முதலில் எச்சரிக்கையும் அதன்பின் பட்லர் தொடர்ந்தால் மன்கட் அவுட் செய்திருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

அஸ்வின்

பிசிசிஐ அறிவுரை 

அஸ்வினின் இந்தச் செயல், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாடெங்கிலும் உள்ள ஐபிஎல் ரசிகர்கள் அஸ்வின் மீது வசை மாரி பொழிந்து வருகின்றனர். மேலும், அஸ்வினின் செயலை வெளிநாட்டு வீரர்கள் ஷேன் வார்னே உள்ளிட்ட பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

அஸ்வின்

இந்த நிலையில், அஸ்வின் கிரிக்கெட் விளையாட்டில் நாகரிகத்தைக் கடைபிடிக்க பிசிசிஐ வலியுறுத்தி உள்ளது. இதனிடையே ரசிகர்கள் பலரும் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்-போடு விளையாட வேண்டும் என இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

 

இதையும் படிங்க 

சேப்பாக்கத்தில் 1200, சௌகார்பேட்டையில் 6000 – ஐபிஎல் டிக்கெட் விற்பனையில் முறைகேடு

டெல்லியை வீழ்த்தி த்ரில் வெற்றி – புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்