கிரிக்கெட் கடவுளுக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்!

 

கிரிக்கெட் கடவுளுக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்!

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் லாரியஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2019 ஆம் ஆண்டில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருது வழங்கும் விழா, ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் தொடக்கத்தில், அண்மையில் உயிரிழந்த‌ கூடைப்பந்து வீரர் கோப் பிரையண்டிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

விளையாட்டு உலகில் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான லாரியஸ் (Laureus) விருதை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பெற்றுள்ளார்.  

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் லாரியஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2019 ஆம் ஆண்டில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருது வழங்கும் விழா, ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் தொடக்கத்தில், அண்மையில் உயிரிழந்த‌ கூடைப்பந்து வீரர் கோப் பிரையண்டிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

2011-world-cup

சிறந்த வீரருக்கான விருது, ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் ஆறு முறை சாம்பியன் பட்டம் வென்றவரான லீவிஸ் ஹேமில்டனுக்கும், நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸிக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதன் மூலம், லாரியஸ் விருதை வென்ற முதல் கால்பந்து வீரர் என்ற சாதனைக்கு மெஸ்ஸி சொந்தக்காரர் ஆனார். சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருது, அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் ஜாம்பவானும், உலக சாம்பியன்ஷிப் தொடரில் அதிக பதக்கங்களை வென்றவருமான சிமோன் பைல்ஸ் தட்டிச் சென்றார். கடந்தாண்டு நடைபெற்ற ஆடவருக்கான ரக்பி உலகக்கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா, சிறந்த அணிக்கான விருதை வசப்படுத்தியது. லாரியஸ் வாழ்நாள் சாதனையாளர் விருதை, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கூடைப்பந்து ஜாம்பவான் (Dirk Nowitzki) டிர்க் நோவிட்ஸ்கி தமதாக்கினார். கடந்த 20 ஆண்டு காலத்தில், 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பையை கைப்பற்றியபோது வீரர்கள் சச்சினை சுமந்துசென்றது, சிறந்த விளையாட்டு தருணமாக அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு விருது அளிக்கப்பட்டது. விழாவில் பேசிய சச்சின் டெண்டுல்கர், விளையாட்டால் மக்களை ஒருங்கிணைக்க முடியுமென்ற தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலாவின் பொன்மொழியை நினைவுகூர்ந்தார். இளைஞர்களுக்கு தூண்டுகோலாக உள்ள அனைத்து விளையாட்டு பிரபலங்களுக்கும் விருதை அர்ப்பணிப்பதாக சச்சின் பேசினார். 

sachin-09

நான், 19 வயதில் தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவை சந்தித்தேன். அவரின் இரக்கக் குணம் என்றுமே தலைமைப் பண்பை பாதித்ததில்லை. விளையாட்டால் மக்களை ஒருங்கிணைக்க முடியுமென்ற அவர் அற்புதமான பொன்மொழியை கூறியிருக்கிறார். இளைஞர்களுக்கு தூண்டுகோலாக இருக்கும் விளையாட்டு பிரபலங்களுக்கு நான் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென்ற 28 ஆண்டு கால இந்தியாவின் கனவை தனது தோள்களில் சுமந்து சென்று நிறைவேற்றியவர் என சச்சினுக்கு விழாவில் புகழாரம் சூட்டப்பட்டது. லாரியஸ் விருதை சச்சின் டெண்டுல்கர் வென்றதால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அளவில்லா கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.