கிராமத்தில் கொரோனா தொற்று…உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் எதிர்ப்பு – கேள்விக்குறியான மனிதாபிமானம்!

 

கிராமத்தில் கொரோனா தொற்று…உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் எதிர்ப்பு – கேள்விக்குறியான மனிதாபிமானம்!

கிராமத்தில் கொரோனா தொற்று இருப்பதால் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமராவதி: கிராமத்தில் கொரோனா தொற்று இருப்பதால் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகேயுள்ள மோபிதேவி லங்கா கிராமத்தை சேர்ந்தவர் கார் ஓட்டுநர் வெங்கடேஸ்வர ராவ் (42). இவருக்கு நாகலதா என்கிற மனைவியும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேஸ்வர ராவின் குடும்பம் பிழைப்பு தேடி கிருஷ்ணா மாவட்டம் பெத்த புலிபாக்கா கிராமத்திற்கு சென்றனர். இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வெங்கடேஸ்வர ராவ் கடந்த செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து வெங்கடேஸ்வர ராவின் உடலை அவரது மனைவி ஒரு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு சென்றார். ஆனால், ஊரில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதால் தற்கொலை செய்து கொண்டவரின் உடலை இங்கு அடக்கம் செய்யக் கூடாது என்று நாகலதாவிடம் உறவினர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளார்கள்.

ttn

இந்த வாக்குவாதத்திற்கு இடையில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வெங்கடேஸ்வர ராவ் உடலை சாலையில் இறக்கி வைத்து விட்டு சென்று விட்டனர். இதனால் செய்வதறியாமல் தனது கணவரின் உடலுடன் விடிய,விடிய அழுதபடி மகனுடன் நாகலதா உட்கார்ந்திருந்தார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கிராம வருவாய் அலுவலர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் நாகலதாவிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து வெங்கடேஸ்வர ராவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொரோனா தொற்று இருக்கும் கிராமத்தில் உடலை அடக்கம் செய்யவிடாமல் உறவினர்களே ஒரு குடும்பத்தை கிராமத்தை விட்டு விரட்டிய சம்பவம் மனிதாபிமானத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது.