கியர் கம்பிக்கு பதிலாக மரக்குச்சி: அச்சத்தில் பொது மக்கள்

 

கியர் கம்பிக்கு பதிலாக மரக்குச்சி: அச்சத்தில் பொது மக்கள்

மேலூர் பகுதியில் கியர் கம்பிக்கு பதிலாக மரக்குச்சியை வைத்து அரசு பேருந்து இயக்கப்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை: மேலூர் பகுதியில் கியர் கம்பிக்கு பதிலாக மரக்குச்சியை வைத்து அரசு பேருந்து இயக்கப்பட்டது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, மேலூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 53 பேருந்துகள் இயங்கி வருகின்றன. அதில் பல அரசு பஸ்கள் ஓட்டை, உடைசல்களாகவே உள்ளது என்று புகார் எழுந்துள்ளது. மேற்கூரை பலத்த சேதம் அடைந்து உள்ளதால் மழை நீர் பேருந்திற்குள் வடிவதும் , இங்கு வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது. 
இதனால் அந்த ஊர் மக்கள் அது போன்ற பேருந்தில் பயணம் செய்ய அச்சமாக இருக்கிறது என்று கூறியுள்ளனர். 

இந்த நிலையில் அங்கு ஒரு பேருந்தின் கியர் கம்பி உடைந்து விட்டதால், அதற்கு பதிலாக மரக்குச்சியை நுழைத்து கயிற்றால் கட்டி வைத்து பஸ் ஆபத்தான முறையில் இயக்கப்படுகிறது. மேலும் பஸ் செல்லும் பொது மரக்குச்சி கழன்று விடாமல் இருக்க ஒரு பயணி அதனை பிடித்தவாறு பயணித்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த மரக்குச்சி கியரை புகைப்படம் எடுத்து பயணி ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம்  வைரலாகி பரவி வருகின்றது. எனவே ஆபத்தை உணர்ந்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பஸ்களை மாற்றிவிட்டு புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.