கின்னஸ் சாதனை படைத்த பிரபல நடிகை மரணம்: திரையுலகினர் இரங்கல்!

 

கின்னஸ் சாதனை படைத்த பிரபல நடிகை மரணம்: திரையுலகினர் இரங்கல்!

பழம்பெரும் நடிகை விஜயநிர்மலா மாரடைப்பால் ஹைதராபாத்தில் நேற்று காலமானார். அவருக்கு வயது 73. 

ஹைதராபாத்: பழம்பெரும் நடிகை விஜயநிர்மலா மாரடைப்பால் ஹைதராபாத்தில் நேற்று காலமானார். அவருக்கு வயது 73. 

vijayanirmala

தமிழ் தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தவர் நடிகை  விஜயநிர்மலா. இவர் தமிழில் பணமா பாசமா படத்தில் எலந்தப்பழம் பாடலில் இவர் ஆடி நடித்த நடனமானது இன்று வரை பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. எம்ஜிஆரின் என் அண்ணன் படத்தில் முத்துராமனுக்கு ஜோடியாக நடித்த இவர் இதுவரை சுமார் 200 படங்களில் நடித்து அசத்தியுள்ளார். 

vijayanirmala

நடிப்பு மட்டுமில்லாது இயக்கத்திலும் ஆர்வம் கொண்ட விஜயநிர்மலா இதுவரை 44 படங்களை இயக்கிய  பெண் இயக்குநர்  என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இதன் காரணமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குநர் என்ற பெருமையை பெற்றார். நடிப்பு, இயக்கம் என இயங்கி வந்த  விஜயநிர்மலா தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவை மணந்துக் கொண்டார்.
இவருக்கு நரேஷ் என்ற மகனும் உள்ளார்.

vijayanirmala

சமீபகாலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு   ஹைதராபாத் காண்டினென்ட்டல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விஜயநிர்மலா, நேற்றிரவு  மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.