கிண்டி சிறுவர் பூங்காவில் நுழைவுக் கட்டணம் திடீர் உயர்வு !

 

கிண்டி சிறுவர் பூங்காவில் நுழைவுக் கட்டணம் திடீர் உயர்வு !

அங்குக் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏதுவாக ஏராளமான வசதிகள் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு நாள் தோறும் நூற்றுக் கணக்கான மக்கள் வந்து செல்வர்.

நாட்டிலேயே 8வது சிறிய பூங்காவான ‘கிண்டி தேசிய பூங்கா’ சென்னையில் அமைந்துள்ளது. இதில்,  350க்கும் மேற்பட்ட தாவர வகைகளும், 100க்கும் மேற்பட்ட பறவையினங்களும் சில பாலூட்டி இனங்களும் அமைந்துள்ளது. இதன் அருகிலேயே சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

tttn

அங்குக் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏதுவாக ஏராளமான வசதிகள் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு நாள் தோறும் நூற்றுக் கணக்கான மக்கள் வந்து செல்வர். இந்த பூங்காவில் சிறுவர்களுக்கு ரூ.5 மற்றும் பெரியவர்களுக்கு ரூ.20 எனக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அது மட்டுமில்லாமல், பூங்காவினுள் கேமரா, மொபைல் போன்கள் எடுத்துச் சென்றால் அதற்கும் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. 

ttn

இந்நிலையில், கிண்டி பூங்காவின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், பெரியவர்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், சிறியவர்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பூங்காவில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ஏதுவாக பார்வையாளர்கள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.