“கிணத்த காணோம்னு சொன்ன மாதிரி,  மெரீனா பீச்ச காணோம்னு சொல்லப்போறோம்”2100 ம் ஆண்டு  நடக்கப்போகும் அதிசயம்..   

“கிணத்த காணோம்னு சொன்ன மாதிரி,  மெரீனா பீச்ச காணோம்னு சொல்லப்போறோம்”2100 ம் ஆண்டு  நடக்கப்போகும் அதிசயம்..   

புவி வெப்பமடைதலுக்கு வழிவகுக்கும்  மாசுபாட்டை நாம் கடுமையாகக் குறைத்தாலும், பூமியின்  மணல் கரையோரங்களில் மூன்றில் ஒரு பகுதி அதற்குள் மறைந்து போகக்கூடும், இதனால் பெரிய மற்றும் சிறிய நாடுகளில் கடலோர சுற்றுலா முடங்கிவிடுமென   நேச்சர் காலநிலை மாற்றம் இதழில் தெரிவித்தனர்.

காலநிலை மாற்றம் மற்றும் கடல் மட்ட உயர்வு காரணமாக  2100ம் ஆண்டு  வாக்கில் உலகின் பாதி மணல் கடற்கரைகளை அழிந்து போகுமென  ஆராய்ச்சியாளர்கள் திங்கள்கிழமை எச்சரித்தனர்.

புவி வெப்பமடைதலுக்கு வழிவகுக்கும்  மாசுபாட்டை நாம் கடுமையாகக் குறைத்தாலும், பூமியின்  மணல் கரையோரங்களில் மூன்றில் ஒரு பகுதி அதற்குள் மறைந்து போகக்கூடும், இதனால் பெரிய மற்றும் சிறிய நாடுகளில் கடலோர சுற்றுலா முடங்கிவிடுமென   நேச்சர் காலநிலை மாற்றம் இதழில் தெரிவித்தனர்.

” மணல் கடற்கரைகள் சுற்றுலாவைத் தவிர,கடலோர புயல்கள் மற்றும் வெள்ளம் ஆகியவற்றிலிருந்து நம்மை பாதுகாக்கின்றன.எதிர்காலத்தில் மணல் கடற்கரைகள் இல்லாமல்  வானிலை மாற்றங்கள்  அதிகமாக இருக்கும்” என்று ஐரோப்பிய ஆணையத்தின் கூட்டு ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்  மைக்கேலிஸ்  கூறினார்.

climate

அமெரிக்கா போன்ற சில நாடுகள் ஏற்கனவே விரிவான பாதுகாப்பு முறைகளைத் திட்டமிட்டுள்ளன,ஆனால் பெரும்பாலான நாடுகளில் இத்தகைய  திட்டங்கள் சாத்தியமற்றவை,மட்டுமல்ல  கட்டுப்படுத்த முடியாதவை 

சமீப கண்டுபிடிப்புகள்படி, ஆஸ்திரேலியாவின்   மணல் கடற்கரைகளும் கடுமையாக பாதிக்கக்கூடும், அடுத்த 80 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 15,000 கிலோமீட்டர் (9,000 மைல்களுக்கு மேல்)  கனடா, சிலி மற்றும் அமெரிக்கா கடற்கரைகளும்  காணாமல் போகும்.அந்த நாடுகளோடு மெக்ஸிகோ,சீனா,ரஷ்யா,அர்ஜென்டினா,இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளும் மிகவும் மோசமான நிலையில் மணல் கரையோரத்தை இழக்குமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் .