கிடைத்த 5 தொகுதிகளில் போட்டியிடப்போகும் பி.ஜே.பி வேட்பாளர்கள் யார் யார்?

 

கிடைத்த 5 தொகுதிகளில் போட்டியிடப்போகும் பி.ஜே.பி வேட்பாளர்கள் யார் யார்?

பி.ஜே.பியுடன் ஏன் கூட்டணிவைத்தோம், அது திருநாவுக்கரசர் சொல்வது போல் கட்டாய கல்யாணம் அல்ல!

பி.ஜே.பியுடன் ஏன் கூட்டணிவைத்தோம், அது திருநாவுக்கரசர் சொல்வது போல் கட்டாய கல்யாணம் அல்ல! வேண்டி விரும்பி செய்துகொண்ட காதல் திருமணம்தான் என்று பொது மேடைகளில் பேசி சமாளிக்கவும் குமுரும் தொண்டர்களை கூலாக்கவும் போராடிக்கொண்டு இருக்கின்றன ;அ.தி.மு.கவும் பா.ம.கவும். 

பி.ஜே.பிக்கு அந்தக்  கவலை ஏதுமில்லை.அடிமைகள் கிடைத்துவிட்ட உற்சாகத்தில் அது வேட்பாளர் தேர்வை துவக்கிவிட்டது.

இப்போதைய நிலவரப்படி பிஜேபிக்கு கிடைத்திருக்கும் ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இதோ.

திருச்சி :- தமிழிசை செளந்தரராஜன்

கன்னியாகுமாரி:- பொன்
ராதாகிருஷ்ணன்.

நெல்லை :- நைனார் நாகேந்திரன்.

கோவை:- சி.பி ராதாகிருஷ்ணன்

திருப்பூர்:- வானதி சீனிவாசன்.

இதில்,கன்னியாகுமரி, கோவை,நெல்லை வேட்பாளர்களில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.திருச்சி தொகுதியை கைப்பற்ற கருப்பு முருகானந்தமும், திருப்பூர்த் தொகுதியை தட்டிப்பறிக்க ஹெச்.ராஜாவும் முடிந்தவரை முட்டி மோதுவார்கள் என்று பிஜேபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.