கிடா வெட்டி விருந்து வைத்த காவல்துறை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

 

கிடா வெட்டி விருந்து வைத்த காவல்துறை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

வழக்கமாக விநாயகர் சதுர்த்தி மற்றும் மொகரம் பண்டிகையை முன்னிட்டு அதிக அளவிலான போலீஸார் குவிக்கப்படுவது வழக்கம். சில இடங்களில் மதரீதியான பிரச்னை ஏற்படும் என்பதால் அங்கு மட்டும் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

கிருஷ்ணகிரி: வழக்கமாக விநாயகர் சதுர்த்தி மற்றும் மொகரம் பண்டிகையை முன்னிட்டு அதிக அளவிலான போலீஸார் குவிக்கப்படுவது வழக்கம். சில இடங்களில் மதரீதியான பிரச்னை ஏற்படும் என்பதால் அங்கு மட்டும் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் விநாயகர் சதுர்த்தியும், மொகரம் பண்டிகையும் எவ்வித பிரச்னையும் இன்றி இரு மதத்தினரும் நடத்தி முடித்தனர். இதையடுத்து, மதநல்லிணக்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்து – முஸ்லீம் மக்களுக்கு கெலமங்கலம் காவல்துறையினர் கிடாவெட்டி விருந்து வைத்தனர்.

காவல் ஆய்வாளர் சிவலிங்கம் தலைமையில் நடந்த கறிவிருந்தில், இரு மதத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு விருந்து உண்டு மகிழ்ந்தனர். இந்த விருந்து, அப்பகுதி மக்களிடையே வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.