கிடாவெட்டுக்கு சென்ற இடத்தில் உயிரை விட்ட வியாபாரி! சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்!

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வந்ததால், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ஏரி, குளங்கள் முதலான நீர்நிலைகள் அதிகளவில் தண்ணீருடன் இருக்கின்றன. அதிக அளவிலான நீர்வரத்து காரணமாக அணைகளும் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், ராசிபுரத்தை சேர்ந்த பரமசிவம் (62) என்பவர் குளிக்கச் சென்ற போது, பாறை வழுக்கியதில் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

death

வெங்காய வியாபாரியான இவர் நேற்று கொல்லிமலை சோளக்காடு அருகே உள்ள நாச்சியார் கோவிலில்  உறவினர் நடத்திய கிடாவெட்டு விருந்துக்காக நண்பர்களுடனும், உறவினர்களுடனும் சென்றார்.  இந்நிலையில், நேற்று மாலை அப்பகுதியில் உள்ள ஓடையில் குளித்துக்  கொண்டிருந்தார். குளித்து முடித்து மேலேறி வருகையில் வழியில் இருந்த பாறை வழுக்கியதில், கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த பரமசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிடாவெட்டுக்காக அந்த இடத்தில் ஒன்று கூடிய உறவினர்களும், நண்பர்களும் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.