கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் புதிய அணியின் புதிய கேப்டன் ஆகிறார் கேஎல் ராகுல்!

 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் புதிய அணியின் புதிய கேப்டன் ஆகிறார் கேஎல் ராகுல்!

2020ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியின் புதிகேய கேப்டனாக அதிரடி துவக்க வீரர் கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியின் புதிகேய கேப்டனாக அதிரடி துவக்க வீரர் கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ttn

கடந்த இரண்டு சீசன்களாக கேப்டனாக இருந்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெல்லி அணிக்கு 7.40 கோடிக்கு ஏலத்திற்கு முன்பாக நடைபெற்ற வீரர்கள் வர்த்தகத்தில் மாற்றப்பட்டார். இவர் தலைமையில் இரண்டு சீசன்களிலும் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை.

2018ஆம் ஆண்டு பெங்களூரு அணியில் இருந்து பஞ்சாப் அணிக்கு சென்ற ராகுல், இரண்டிலும் அதிக ரன் குவித்த வீரராக இருந்து வருகிறார். இவர் 659 மற்றும் 593 ரன்கள் முறையே கடந்த இரு சீசன்களில் குவித்துள்ளார். இதில் 12 அரைசதங்கள் மற்றும் 1 சதமும் அடங்கும்.

ttn

இந்த ஐபிஎல் ஏலத்தில், பஞ்சாப் அணி ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை 10.75 கோடிக்கு வாங்கியது. அடுத்ததாக, மேற்கிந்திய தீவுகளின் வீரரான ஷெல்டன் காட்ரெல்லை 8.50 கோடிக்க வாங்கியது கவனிக்க தக்கதாக இருந்தது.

பஞ்சாப் அணி வீரர்கள் பட்டியல்:

பேட்ஸ்மேன்கள்: கிறிஸ் கெய்ல், மாயங்க் அகர்வால், கருண் நாயர், சர்பராஸ் கான், மந்தீப் சிங்

பந்துவீச்சாளர்கள்: ஷெல்டன் கோட்ரெல் (ரூ 8.5 கோடி), இஷான் பொரல் (ரூ 20 லட்சம்), ரவி பிஷ்னோய் (ரூ 2 கோடி), முகமது ஷமி, முஜீப் உர் ரஹ்மான், அர்ஷ்தீப் சிங், ஹார்டஸ் வில்ஜோன், எம் அஸ்வின், ஜே சுசித், ஹர்பிரீத் ப்ரார் , தர்ஷன் நல்கண்டே.

ttn

ஆல்ரவுண்டர்கள்: க்ளென் மேக்ஸ்வெல் (ரூ. 10.75 கோடி), ஜேம்ஸ் நீஷாம் (ரூ .50 லட்சம்), கிறிஸ் ஜோர்டான் (ரூ .3 கோடி), கிருஷ்ணப்ப கவுதம், தீபக் ஹூடா (ரூ .50 லட்சம்), தாஜிந்தர் சிங் தில்லான் (ரூ .20. மில்லியன்).

விக்கெட் கீப்பர்கள்: கே.எல்.ராகுல் (சி), நிக்கோலஸ் பூரன், பிரப்சிம்ரன் சிங் (ரூ. 55 லட்சம்).