காஸ்ட்லி கார் வாங்க டெமோ பார்த்த சிம்பு: வைரலாகும் ஸ்டைலிஷ் கூல் ஸ்டில்ஸ்!

 

காஸ்ட்லி கார் வாங்க டெமோ பார்த்த சிம்பு: வைரலாகும் ஸ்டைலிஷ் கூல் ஸ்டில்ஸ்!

இரண்டாவது இன்னிங்க்ஸில் ராஜாவாக களமிறங்கியுள்ள நடிகர் சிம்பு, புதிதாக விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கவுள்ளார்.

சென்னை: இரண்டாவது இன்னிங்க்ஸில் ராஜாவாக களமிறங்கியுள்ள நடிகர் சிம்பு, புதிதாக விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கவுள்ளார்.

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகவுள்ள நிலையில், நடிகர் சிம்புவுக்கு ரெட் கார்ட் போட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்திருப்பதாக செய்தி வெளியானது. இது சிம்பு ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, காஸ்ட்லியான கார் ஒன்றை நடிகர் சிம்பு வாங்கவுள்ளார்.

சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள பென்ட்லி கான்டினென்டல் காரை வாங்கவுள்ளார். அந்த காரை வாங்க ஏற்கனவே புக்கிங் செய்த சிம்பு, நேற்று டெமோ பார்த்துள்ளார். இன்னும் ஒரு சில நாட்களில் இந்த காரை சிம்பு டெலிவரி எடுக்கவுள்ளார். இந்நிலையில் சிம்பு டெமோ பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நடிகர்களுக்குள் யார் விலை உயர்ந்த காரை வைத்திருக்கிறார்கள் என்ற போட்டி உள்ள நிலையில், விலை உயர்ந்த யாரிடமும் இல்லாத புதிய மாடல் காரை சிம்பு வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.