காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி ட்வீட்!!

காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி ட்வீட்!!

காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமருடன் தொலைபேசியில் பேசிய பிறகு மிகவும் கடுமையான சூழ்நிலை நிகழ்ந்து வருவதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி ட்வீட்!!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கு தனிச்சிறப்பு மற்றும் அந்தஸ்து வழங்கிய சரத்து 370 மற்றும் 35ஏ இரண்டையும் ரத்து செய்து இந்தியாவின் சக மாநிலமாக மாநிலங்களவையில் மசோதா ஓரிரு வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. 

காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமருடன் தொலைபேசியில் பேசிய பிறகு மிகவும் கடுமையான சூழ்நிலை நிகழ்ந்து வருவதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கு தனிச்சிறப்பு மற்றும் அந்தஸ்து வழங்கிய சரத்து 370 மற்றும் 35ஏ இரண்டையும் ரத்து செய்து இந்தியாவின் சக மாநிலமாக மாநிலங்களவையில் மசோதா ஓரிரு வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. 

இதற்கு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் சில பகுதிகளிலும் கடும் போராட்டம் நிலவியது. மேலும் இந்த சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொடுக்க வேண்டும் என இந்தியாவின் சில பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன. 

இச்சம்பவத்தில் பாகிஸ்தான் பக்கம் சீன அரசு ஆதரவளித்தது. 

மேலும் இந்த விவகாரம் ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பூட்டிய அறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியாவின் முடிவு சட்டப்படி செல்லும் என உறுதியானது. 

இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து பாகிஸ்தான் மற்றும் இந்திய பிரதமர்களான இம்ரான் கான் மற்றும் மோடியிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அவரது பதிவில், “எனது நண்பர்களான இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இருவரிடமும் தொலைபேசியில் பேசினேன். அதில் வர்த்தகம், தற்போது நிலவிவரும் ஒப்பந்த முடிவுகள் ஆகியன குறித்து பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து காஷ்மீரில் நிலவி வரும் சூழ்நிலை குறித்தும் பேசினேன். அப்போது அவர்கள் கூறிய பதிலில் காஷ்மீரில் மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது என்பதை தெரிந்து கொண்டேன்” என்றார்.

மேலும், இந்த பதட்ட சூழ்நிலை தொடர்ந்து நிலவாமல் குறைப்பதற்கு இருநாடுகளும் கலந்து பேசி விரைவில் முடிவை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தேன் என்று பதிவிட்டிருந்தார்.