காஷ்மீர் விவகாரம்: ஐ.நா வாக்கெடுப்பில் சீனா, பாகிஸ்தானுக்கு மூக்கு உடைப்பு!!

 

காஷ்மீர் விவகாரம்: ஐ.நா வாக்கெடுப்பில் சீனா, பாகிஸ்தானுக்கு மூக்கு உடைப்பு!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் இரண்டாக பிரித்ததற்கு தனது எதிர்ப்பை தொடர்ந்து முன்வைத்து வந்தார்

காஷ்மீர் விவகாரம்: ஐ.நா வாக்கெடுப்பில் சீனா, பாகிஸ்தானுக்கு மூக்கு உடைப்பு!!

காஷ்மீர் தனி அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபையில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியாவிற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்ததால், பாகிஸ்தானுக்கும் அவருக்கு ஆதரவு தெரிவித்த சீனாவிற்கும் மூக்கு உடைக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சரத்து 370 மற்றும் 35 ஏ வின் படி இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட விட சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது இதனை அண்மையில் பாராளுமன்றத்தில் மசோதா ஒன்றை நிறைவேற்றி மத்தியில் உள்ள பாஜக அரசு உடனடியாக நீக்கி இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு உட்படுத்தப்பட்ட சக மாநிலமாக மாற்றியது. 

இதனால் ஜம்மு காஷ்மீருக்கும் பாகிஸ்தானுக்கும் இருந்துவந்த போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. மேலும் இதற்கு பல பாகிஸ்தான் மக்களும், ஜம்மு காஷ்மீரில் வசித்து வரும் பாகிஸ்தான் ஆதரவு மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

china

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் இரண்டாக பிரித்ததற்கு தனது எதிர்ப்பை தொடர்ந்து முன்வைத்து வந்தார். மேலும், ஐக்கிய நாடுகள் சபைக்கு காஷ்மீர் ஒரு உலக பிரச்சினையாக எடுத்து விவாதிக்க வேண்டும் எனவும் கடிதம் எழுதினார். 

இதனை பரிசீலித்த ஐக்கிய நாடுகள் சபை ரகசிய அறையில் மாநாடு ஒன்றை நடத்தி வாக்கெடுப்பில் ஈடுபட்டது. முதலில் பாகிஸ்தான் அரசு தனது வாதத்தை முன்வைத்தது. இதற்கு சீனா ஆதரவளித்தது.

அதன் பின்னர் ரஷ்யா தரப்பு தெரிவிக்கையில் ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் எல்லைப் பகுதிக்கு உட்பட்டு இருக்கிறது. இது இந்தியாவின் உட்கட்ட விவகாரம், எனவே இந்தியாவின் இந்த முடிவு எந்த வகையிலும் உலக பிரச்சனையாக பார்க்கப்படவில்லை எனக் கூறப்பட்டது. 

இறுதியில், பாகிஸ்தானின் எதிர்ப்பு எந்த வகையிலும் இந்தியாவின் இந்த முடிவை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. மேலும் இந்தியாவிற்கு இந்த வாக்கெடுப்பில் அதிக வாக்குகள் கிடைத்ததால் இதனை மேலும் விவாதிக்கவேண்டிய அவசியமில்லை என ஐநா சபை தெரிவித்துவிட்டது.

இந்த வாக்கெடுப்பின் போது பேசிய ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி கூறுகையில், ஜம்மு காஷ்மீர் முற்றிலுமாக ஒருங்கிணைந்த பகுதி. இதன் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது முழுக்க முழுக்க இந்தியாவின் உள்விவகாரம். இதனை மற்ற நாடுகள் நிச்சயம் புரிந்து கொள்வர் என நம்புகிறேன். கடந்த பல ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் எந்தவித முன்னேற்றம் வளர்ச்சி நிகழவில்லை. ஜம்மு காஷ்மீர் மக்களை மேம்படுத்தவே இப்படி ஒரு அதிரடி முடிவு எடுக்கப்பட்டது என்றார்.