காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே என் அப்பா கைது செய்யப்பட்டுள்ளார்: கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!

 

காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே என் அப்பா கைது செய்யப்பட்டுள்ளார்: கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!

காஷ்மீர் விவகாரத்தைத் திசைதிருப்பவே, எனது தந்தையை கைது செய்துள்ளனர் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி குற்றச்சாட்டியுள்ளார். 

காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே என் அப்பா கைது செய்யப்பட்டுள்ளார்: கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!

சென்னை: காஷ்மீர் விவகாரத்தைத் திசைதிருப்பவே, எனது தந்தையை கைது செய்துள்ளனர் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி குற்றச்சாட்டியுள்ளார். 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து அவரை நீரில் ஆஜராகுமாறு சிபிஐ உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து  ப.சிதம்பரம் நேற்று இரவு  கைது செய்யப்பட்டார். அவரது வீட்டின் கதவுகள் திறக்கப்படாததால் சிபிஐ அதிகாரிகள், இல்லத்திற்குள் சுவர் ஏறி குதித்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், சென்னையிலிருந்து டெல்லிக்கு இன்று காலை சென்ற கார்த்தி சிதம்பரம், செய்தியாளர்களைச்  சந்தித்தார். அப்போது பேசிய அவர், காஷ்மீர் விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு  அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அரங்கேற்றப்பட்ட நாடகம்.  காங்கிரஸ் கட்சியை அச்சுறுத்தவும், என் அப்பாவுக்குக் கெட்ட  பெயரைப் பெற்றுத் தர வேண்டும் என்று முயற்சி செய்கின்றனர். அதனால் இந்த வழக்கைச்  சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்’ என்றார். முன்னதாக காஷ்மீர் விவகாரத்தில் திமுக அணைத்து கட்சிகளுடனும் டெல்லியில் போராட்டம் நடத்தவுள்ள நிலையில் அதில்  கார்த்தி சிதம்பரம் பங்கேற்கவுள்ளார்.  

 

டெல்லியில் உள்ள ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று ஆஜர்படுத்தப் பட உள்ளது குறிப்பிடத்தக்கது.