காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் முகத்தில் கரியை பூசிய தலிபான் தீவிரவாத அமைப்பு

 

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் முகத்தில் கரியை பூசிய தலிபான் தீவிரவாத அமைப்பு

காஷ்மீர் ஒன்றும் ஆப்கானிஸ்தான் இல்லை என பாகிஸ்தானை தலிபான் தீவிரவாத அமைப்பு கண்டித்துள்ளது.

பொதுவாக தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானுக்குதானே சப்போர்ட் செய்யும் இது என்னடா புதுசா இருக்குன்னு பார்க்றீங்களா? காரணம் இல்லாம இந்த சம்பவம் நடைபெறவில்லை. சிறப்பு அந்தஸ்து நீக்கம் உள்பட காஷ்மீர் விஷயத்தில் இந்தியா எடுத்த நடவடிக்கைகளால் பாகிஸ்தான் ஆட்டம் கண்டு விட்டது. 

ஷெபாஸ் ஷெரீப்

இதனையடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அந்நாட்டு நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் செபாஸ் ஷெரீப் காஷ்மீரையும் ஆப்கானிஸ்தானையும் ஒப்பிட்டு பேசினார். காபூலில் அமைதியை ஆப்கன்கள் மகிழ்ச்சி அனுபவித்து கொண்டாடுகிறார்கள் இது என்ன வகையான ஒப்பந்தம்? ஆனால் காஷ்மீரில் ரத்தம் சிந்துகிறது? இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார். 

கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் அமைதி ஏற்படுத்தும் நோக்கில் தலிபான் தீவிரவாத அமைப்புடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு தற்சமயம் அமைதி நிலவி வருகிறது. இதனை குறிப்பிட்டுதான் பாகிஸ்தானின் எதிர்கட்சி தலைவர் அப்படி பேசி இருந்தார்.

காஷ்மீர்

இதற்கு தலிபான் தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளது. தலிபான் தீவிரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஷாபிஹுல்லா முஜாஹுத் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில கட்சிகள் காஷ்மீர் விவகாரத்தை ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிடுவது பிரச்சினையை பெரிதுபடுத்த எந்தவிதத்திலும் உதவாது. ஆப்கானிஸ்தான் விவகாரத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.

பிராந்தியத்தில் வன்முறை மற்றும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகள் எடுப்பதை இந்தியாவும், பாகிஸ்தானும் தவிர்க்க வேண்டும். ஆப்கானிஸ்தானை மற்ற நாடுகளுக்கு இடையிலான போட்டி அரங்கமாக மாற்ற வேண்டாம் என் குறிப்பிடப்பட்டுள்ளது.