காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் வீட்டு காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு…

 

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் வீட்டு காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு…

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் வீட்டு காவல் மேலும் 3 மாதங்களுக்கு ஸ்ரீநகர் மாவட்ட மாஜிஸ்திரேட் நீட்டித்துள்ளார்.

2019 ஆகஸ்ட் 5ம் தேதியன்று மத்திய அரசு, ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களா பிரித்தது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னதாக, ஜம்மு அண்டு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மெஹபூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரிவினைவாதிகளை வீட்டுகாவலில் வைத்தது.

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியவுடன் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள் என ஜம்மு அண்டு காஷ்மீர் நிர்வாகம் கூறியது. அதன்படி கொஞ்சம் கொஞ்சமாக தலைவர்களை வீட்டு காவலிருந்து விடுவித்தது. 7 மாதங்களுக்கு பிறகு பரூக் அப்துல்லா வீட்டுக்காவலிருந்து விடுவிக்கப்பட்டார். அண்மையில் முன்னாள் உமர் முதல் அப்துல்லா கூட விடுவிக்கப்பட்டார். ஆனால் மெஹபூபா முப்தி தொடர்ந்து வீட்டு காவலில் இருந்தார். கடந்த 8 மாதங்களாக அரசுக்கு சொந்தமான 2 விருந்தினர் மாளிகையில் வைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 7ம் தேதியன்று அவரது சொந்த வீட்டுக்கு மெஹபூபா முப்தி மாற்றப்பட்டார். ஆனால் அவரது வீட்டுக்காவல் தொடர்ந்தது. இந்நிலையில் நேற்று பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அவரது வீட்டுக்காவல் நிறைவடைவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன் மீண்டும் அவரது வீட்டுக்காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் மாவட்ட மாஜிஸ்திரேட் மெஹபூபா முப்தியின் வீட்டுக்காவலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.