காஷ்மீர் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

 

காஷ்மீர் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 351 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகின. 

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 351 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகின. 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இதுபற்றிய அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை வெளியிட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் அமித்ஷா, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்யும் மசோதா, அந்த மாநிலத்தை இரண்டாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா உள்ளிட்ட 4 மசோதாக்களை தாக்கல் செய்ய எழுந்தார். அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள். ஆனால் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில் இன்று  காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 351 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகின.