காஷ்மீர் மக்களை வாக்குறுதிகளால் பேச விடாமல் செய்த பிரதமர் மோடி….

 

காஷ்மீர் மக்களை வாக்குறுதிகளால் பேச விடாமல் செய்த பிரதமர் மோடி….

காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்பது உள்பட பல்வேறு உறுதி மொழிகளை காஷ்மீர் மக்களுக்கு தனது தொலைக்காட்சி உரையில் பிரதமர் மோடி அளித்தார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட வேண்டும் நீண்ட காலமாக கோரிக்கை நிலவி வந்தது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் மத்தியில் ஆளும் பா.ஜ. அரசு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகளை கொடுத்து வந்த 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளை நீக்கியது. மேலும், அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. 

யூனியன் பிரதேசங்கள்

 

சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதால் எந்தவித அசம்பாவிதங்களும் நடந்து விடக்கூடாது என முன்னெச்சரிக்கையாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நள்ளிரவு முதல் அம்மாநில அரசியல் தலைவர்களை வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். மேலும் அங்கு செல்போன், இன்டர்நெட் என அனைத்து தொலைத்தொடர்பு வசதிகளும் முடக்கப்பட்டன. இன்று முதல் அரசு பணியாளர்கள் பணிக்கு திரும்பும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு பிரதமர் மோடி தொலைக்காட்சியில் 370 சட்டப்பிரிவு நீக்கம் தொடர்பாக நாட்டுக்கு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: சிறப்பு சட்டப்பிரிவுகளால் தீவிரவாதம், ஊழல் போன்றவைதான் வளர்ந்தது. காஷ்மீரில் வளர்ச்சி ஏற்படவில்லை. தற்போது 370, 35ஏ சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டதால் காஷ்மீருக்கு புதிய சகாப்தம் தொடங்கி விட்டது. இனி ஜம்மு காஷ்மீர், லடாக்கில் வளர்ச்சி ஏற்படும்.

காஷ்மீர்

ஜம்மு அண்டு காஷ்மீர் நீண்ட நாளைக்கு யூனியன் பிரதேசமாக இருக்காது. இது தற்காலிக ஏற்பாடுதான். அமைதி மற்றும் வளர்ச்சியில் வேகம் எடுத்தபிறகு மாநில அந்தஸ்து கிடைக்கும். விரைவில் காஷ்மீர் தேர்தல் நடத்தப்படும். இனி காஷ்மீர் மக்கள் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் தேர்ந்தெடுக்கலாம்.

உங்கள் பிரதிநிதிகள் உங்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் மற்றும்  உங்களிடமிருந்தே தேர்ந்தெடுக்கலாம். கல்வி உரிமை, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. உள்பட முக்கிய சட்டங்கள்  இனி காஷ்மீருக்கும்  பொருந்தும். பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்த அனைவருக்கும் இந்திய குடிமக்களுக்கான அனைத்து உரிமையும் கிடைக்கும் என பல்வேறு வாக்குறுதிகளை அவர் தெரிவித்தார்.