காஷ்மீர் பிரச்சனை… சட்டப்பிரிவு 370 என்ன சொல்கிறது? முழு விவரம்

 

காஷ்மீர் பிரச்சனை… சட்டப்பிரிவு  370 என்ன சொல்கிறது?  முழு விவரம்

நேற்றில் இருந்து திரும்புகிற பக்கமெல்லாம் காஷ்மீர் பிரச்சனையும், சட்டப்பிரிவு 370ஐ பற்றிய விவாதங்களும் தான் இருக்கிறது. அப்படி பெரும் விவாத பொருளாகியுள்ள இந்த அரசியல் சாசன சட்டத்தை பார்ப்போம்.அதில் இடம் பெற்றுள்ள சலுகைகளை காண்போம். இந்தியாவில் உள்ள மற்ற மாநில மக்கள் ஏன் இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்று பார்ப்போம்.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மக்கள் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள்.அவர்கள் இந்தியாவிலும் குடியேறலாம் பாகிஸ்தானிலும் குடியேறலாம். தவிர, ஜம்மு காஷ்மீருக்கு என்று தனியாக கொடி உள்ளது. இதுநாள் வரையில் ஜம்மு காஷ்மீரில் நமது நாட்டின் தேசிய கொடியை அவமதித்தாலும் அது தேச துரோகம் கிடையாது. ஜம்மு காஷ்மீரில் மாநில அரசு 6 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம். ஆனால் நம்மை போன்ற இந்தியாவின் மற்ற மாநிலங்களில் 5 வருடங்கள் தான் வெற்றி பெற்ற அரசு ஆட்சி அமைக்க முடியும்.  இந்திய கொடி, தேசிய சின்னங்கள் மற்றும் தேசிய கீதத்தை அவமதித்தால் அங்கு அது தவறு கிடையாது என்றும் சட்டப்பிரிவு 370 இல் உள்ளது. நம் நாட்டின் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளும் காஷ்மீரை தவிர இந்தியாவின் அனைத்து மாநில  மக்களுக்கும் பொருந்தும். ஆனால், இந்த சட்ட திட்டங்கள் காஷ்மீர் மக்களுக்குப் பொருந்தாது. பாராளுமன்றத்தால் ஜம்மு காஷ்மீரில் உள்ள சில இடங்களுக்கு மட்டுமே சட்ட திருத்தங்களை செய்ய உரிமை உள்ளது.

370 Uniqueness

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு பெண் மற்ற மாநிலங்களில் உள்ள ஒரு ஆணை திருமணம் செய்தால் அந்த பெண்ணிடம் உள்ள காஷ்மீருக்கன குடியுரிமை பறிக்கப்படும். அதே அந்த பெண் பாகிஸ்தானில் இருக்கும் ஒரு ஆணை திருமணம் செய்தால் அந்த பாகிஸ்தான் ஆணுக்கும் இந்திய குடியுரிமை.அளிக்கப்படும். இதனால் பாகிஸ்தானில் இருந்து பல்வேறு பிரிவினைவாத தலைவர்கள் இந்தியாவின் உள்ளே வருகின்றனர். இஸ்லாமியர்கள் பின்பற்றும் சரியத் சட்டம் ஜம்மு காஷ்மீரில் நடைமுறையில் உள்ளது. பஞ்சாயத்து போன்ற அமைப்புகளுக்கு அங்கு உரிமை இல்லை. மேலும் ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு இல்லை. சட்டப்பிரிவு 370 படி இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள மக்கள்,  ஜம்மு காஷ்மீரில் நிலங்களை வாங்க முடியாது. சொந்த நாடாக இருந்தாலும் நமக்கு உரிமைகள் ஜம்மு காஷ்மீரில் மறுக்கப்படும். இவை எல்லாம் தான் சட்டப்பிரிவு 370 சொல்கிறது.