காஷ்மீர் பள்ளத் தாக்கு பகுதிகளில் மீண்டும் ரயில் சேவை தொடக்கம்..!

 

காஷ்மீர் பள்ளத் தாக்கு பகுதிகளில் மீண்டும் ரயில் சேவை தொடக்கம்..!

அங்கு ரயில் சேவை தொலைத்தொடர்பு சேவை உள்ளிட்ட அனைத்தையும் மத்திய அரசு ரத்து செய்தது.

ஜம்மு காஷ்மீருக்குப் பல காலமாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தைத் தடை செய்து, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மத்திய அரசு உத்தரவிட்டது.  இதனை எதிர்த்து ஜம்மு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு ரயில் சேவை தொலைத்தொடர்பு சேவை உள்ளிட்ட அனைத்தையும் மத்திய அரசு ரத்து செய்தது. தற்போது, காஷ்மீர் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதால் செல்போன் சேவை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காஷ்மீரின் பள்ளத் தாக்கு பகுதிகளில் மீண்டும் ரயில் சேவையைத் தொடங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

Kashmir

காஷ்மீரின் பள்ளத் தாக்கு பகுதிகளில் தற்போது நிலவி வரும் களநிலவரங்கள் குறித்து ரயில்வே அமைச்சகம் மூன்று நாட்கள் ஆய்வு செய்யப்போவதாகவும், அந்த ஆய்வை முடித்த பின்னர் வரும் நவம்பர் 11 ஆம் தேதி முதல் காஷ்மீரின் பள்ளத்தாக்கு பகுதிகளில் மீண்டும் ரயில் சேவையைத் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.