காஷ்மீர் பயங்கரவாதிகளுடன் சிக்கிய ஜனாதிபதி விருது வாங்கிய டி.எஸ்.பி! – அதிர்ச்சித் தகவல்

 

காஷ்மீர் பயங்கரவாதிகளுடன் சிக்கிய ஜனாதிபதி விருது வாங்கிய டி.எஸ்.பி! – அதிர்ச்சித் தகவல்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தப்பிக்க உதவியபோது கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி-யிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். 
காஷ்மீரிலிருந்து பயங்கரவாதிகள் தப்பிச்செல்ல உள்ளதாக உளவுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, காரில் வந்த மூன்று பேரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர் தன்னை போலீஸ் டி.எஸ்.பி என்று கூறினார்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தப்பிக்க உதவியபோது கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி-யிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். 
காஷ்மீரிலிருந்து பயங்கரவாதிகள் தப்பிச்செல்ல உள்ளதாக உளவுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, காரில் வந்த மூன்று பேரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர் தன்னை போலீஸ் டி.எஸ்.பி என்று கூறினார். ஆனாலும் அவருடன் வந்த இருவர் நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது. தன்னை போலீஸ் என்று கூறிய நபர் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் காஷ்மீர் விமானநிலையத்தில் பணியாற்றிவந்த போலீஸ் டி.எஸ்.பி  தேவீந்தர் சிங் என்பது உறுதியானது. மேலும், துணிச்சலாக ஈடுபட்டது தொடர்பாக குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றவர் என்றும் அவருக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்க இருந்ததும் தெரியவந்தது.

dsp-devinder-singh-1

தேவீந்தர் சிங்குடன் இருந்த ஒருவன் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த சையத் நவீத்பாபு என்பதும் மற்றொருவன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த ஆசிப் ரத்தர் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வாகனத்திலிருந்து இரண்டு துப்பாக்கிகள், மூன்று கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.
விசாரணையில் டி.எஸ்.பி தேவீந்தர் சிங் நான்கு நாட்கள் விடுமுறை எடுத்திருந்தது தெரிந்தது. அவர், இரண்டு பயங்கரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாகத் தப்பிச் செல்ல உதவியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து டி.எஸ்.பி வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் வீட்டிலிருந்து ஏ.கே 47 துப்பாக்கி, இரண்டு கைத்துப்பாக்கி, கையெறிகுண்டுகளைக் கைப்பற்றினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஷ்மீர் போலீஸ் டி.எஸ்.பி ஒருவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதும் அவர்கள் தப்பிக்க உதவியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டி.எஸ்.பி ஒருவருக்கு மட்டும் தொடர்பு உள்ளதா, வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா, இதுவரை எத்தனை பயங்கரவாதிகளைத் தப்பிக்கவைத்துள்ளார் என்று எல்லாம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.